நிர்வாணமாக ஓடிய முதியவர் பொலிஸாரின் வாகனத்தில் மோதுண்டு பலி!!

Read Time:2 Minute, 19 Second

D540540d0dஅமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பரபரப்பான சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த நபர் ஒருவர் பொலிஸாரின் வாகனத்தின் மீது மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தென்கிழக்கு பகுதியிலுள்ள பகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை நபர் ஒருவர் நிர்வாணமாக சாலை நடுவே படுத்து கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து பொலிசார் அப்பகுதி முழுவதும், அந்த நபரை தேடி அலைந்துள்ளனர்.

இரவு 10.20 மணியளவில் மீண்டும் அதே நபர் நிர்வாணமாக வீதியில் நடமாடுவதாக பொலிஸாருக்கு தகவல் வந்ததுள்ளது. தகவலறிந்த பொலிசார், நான்கு வாகனங்களில் பகுதிக்கு விரைந்துள்ளனர்.

பொலிஸ் வாகனங்களின் சத்தத்தை வைத்து, சுதாரித்துக்கொண்டு வீதிகளில் ஓட ஆரம்பித்துள்ளார் அந்த நபர்.
இந்நிலையில் அவரை வேகமாக துரத்தி வந்த பொலிஸ் வாகனம் ஒன்றின் மீதே எதிர்பாராத விதமாக ஓடிச் சென்று மோதியுள்ளார். சம்பவ இடத்திலேயே குறித்த நபர் அதிக ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொலிஸார், “விபத்தில் இறந்த நபர் யார் என்று இதுவரை அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நபருக்கு சுமாராக 50 முதல் 60 வயது வரை இருக்கலாம். மேலும் அவர் எதற்காக நிர்வாணமாக தெருக்களில் சுற்றித்திரிந்தார் என விசாரணை செய்யப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வௌிநாட்டு வேலை ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய நபருக்கு பொலிஸ் வலைவீச்சு!!
Next post தொழில் அதிபரிடம் தொண்டு நிறுவன பெண் நிர்வாகி ரூ.3¼ லட்சம் மோசடி!!