இந்திய தேசியக் கொடி இடுப்பில்!!

Read Time:2 Minute, 22 Second

maika‘டர்ட்டி பாலிட்டிக்ஸ்’ என்ற பெயரில் உருவாகி வரும் ஹிந்திப் படத்தில் தேசியக் கொடியை இடுப்பில் கட்டியபடி நடிகை மல்லிகா ஷெராவத் அமர்ந்திருக்கும் ஒளிப்படம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

தேசியக் கொடி அவமதிப்பு சட்டத்தின் கீழ் ‘டர்ட்டி பாலிட்டிக்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர்- மற்றும் நடிகை மல்லிகா ஷெராவத் ஆகியோரை தண்டிக்க வேண்டும் என்றும் வணிக நோக்கத்துக்காக தேசியக் கொடியை அவமதிக்கும் இதுபோன்ற சுவரொட்டிகளை அந்த படத்தின் விளம்பரத்துக்கு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் தனகோபால் ராவ் என்பவர்- ஹைதராபாத் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இம்மனுவினை நேற்று விசாரித்த ஹைதராபாத் நீதிமன்ற தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி சென்குப்தா- சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு- மனுதாரரின் குற்றச்சாட்டு தொடர்பாக இன்னும் 3 வாரங்களுக்குள் தங்களது நிலைப்பாட்டினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி- மத்திய அரசின் செயலாளர் ‘டர்ட்டி பாலிட்டிக்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர்- மற்றும் நடிகை மல்லிகா ஷெராவத் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அமிர்கான் நடிப்பில் பி.கே என்ற புதிய படத்தில் அமீர்கான் ஆடைகள் எதுவும் இன்றி இடுப்பிற்கு கீழே டேப்ரெக்கார்டரை கையில் பிடித்தபடி முறைத்துக் கொண்டு நிற்கும் வினோத ஒளிப்படம் படத்திற்கு எதிராக அப்படத்தின் தயாரிப்பாளரான விது வினோத் சோப்ரா மற்றும் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செவ்வாயில் ஒட்சிசனை உருவாக்க தயாராகும் புதிய ரோவர் விண்கலம்!!
Next post 2 கோடி இதுக்குத்தானா..?