ஜோடி சேர்வார்களா இவர்கள்..?

Read Time:1 Minute, 53 Second

Mahesh-Babu-Shruti-Haasanசுருதி ஹாசன் தற்போது ஹரி இயக்கும் பூஜை படத்தில் விஷாலுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பீகாரில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள படக்குழுவினர் விரைவில் படப்பிடிப்பை முடிக்கவுள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மட்டும் மீதமுள்ள நிலையில் அதை முடித்து கொடுத்து விட்டு, மகேஷ் பாபுவுடன் ஜோடி சேரவுள்ளார் சுருதிஹாசன்.

பூஜை படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார் சுருதிஹாசன். தற்போது விஜய் ‘கத்தி’ படத்தில் பிசியாக இருப்பதால் அதற்குள் மகேஷ் பாபு நடிக்கும் தெலுங்கு படத்தில் நடித்துவிட்டு விஜய்யுடன் ஜோடி சேர முடிவுசெய்துள்ளார். இதற்காக ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி செப்டம்பர் மாதத்திற்குள் இப்படத்தை முடிக்கவுள்ளனர். இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.

கொரடாலா சிவா இயக்கும் இப்படத்தில் சம்பத் ராஜ், பிரமானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். ஏற்கனவே சுருதிஹாசன் மகேஷ்பாபுவுடன் ஒரு படத்தில் குத்தாட்டம் ஆடியுள்ளார். மகேஷ்பாபுவுடன் சுருதிஹாசன் ஜோடி சேருவது இதுவே முதல் முறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!
Next post போளூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது!!