திண்டுக்கல்: மைனர் பெண்கள் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!!

Read Time:2 Minute, 0 Second

c8700fc6-2197-443c-be12-17117ff8a4eb_S_secvpfதிண்டுக்கல்அருகே ஒட்டன்சத்திரம் சாஸ்தா நகரை சேர்ந்தவர் பிருந்தா (வயது16). பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரை அதே பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவருக்கு 2-வது திருமணம் செய்து வைக்க பெற்றோரும், உறவினர்களும் ஏற்பாடு செய்தனர். இவர்களது திருமணம் வருகிற 29-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது.

இதுபற்றி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் சமூக நலத்துறை அதிகாரிகள் ஒட்டன்சத்திரம் சென்று மாணவி பிருந்தாவின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இளம் வயதில் திருமணம் செய்து வைப்பதால் ஏற்படும் அவல நிலையை பெற்றோர்களிடம் எடுத்துக் கூறினர். இதனை அவர்கள் ஏற்றுக்கொண்டதால் மகளுக்கு நடைபெற இருந்த திருமணத்தை கைவிட்டனர்.

இதுபோன்று நிலக்கோட்டை அருகே குண்டலபட்டியை சேர்ந்த 16 வயது இளம்பெண்ணுக்கு நடைபெற இருந்த திருமணத்தையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அந்த மைனர் பெண்ணை அதே பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களது திருமணமும் வருகிற 29-ந் தேதி நடைபெற இருந்தது. சமூக நலத்துறை அதிகாரிகள் தகவல் அறிந்து அங்கு சென்றனர். தகுந்த அறிவுரைகள் வழங்கி இளம் வயது திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாலை விபத்தில் பலியான முதலாளியை புதைத்த இடத்தில் படுத்துக்கிடந்த நன்றியுள்ள நாய்!!
Next post மனைவியை எரித்துக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை: கோர்ட்டு தீர்ப்பு!!