திண்டுக்கல் அருகே 2 மைனர் பெண்களின் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!!

Read Time:1 Minute, 48 Second

af392247-3e7d-4cc2-be68-614f242645e1_S_secvpfதிண்டுக்கல் அருகே உள்ள வடமதுரை கே.புதுப்பட்டியை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவரது மகள் காவியா (வயது17). இவருக்கும் சாணார்பட்டியை சேர்ந்த திருமலைராஜூ என்பவரின் மகன் வடிவேலுவுக்கும் (27) திருமணம் நடத்த நிச்சய தார்த்தம் செய்யப்பட்டது.

இவர்களது திருமணம் வருகிற 31–ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. மணப்பெண் காவியாவுக்கு 18 வயது நிறைவு பெறாததால் அதுபற்றி அறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர்.

மணமகளின் பெற்றோரிடம் இளம் வயதில் திருமணம் செய்ய அனுமதியில்லை. மேலும் அவ்வாறு திருமணம் செய்வதால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து விளக்கி கூறினர். இதனை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து காவியாவின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதுபோல் சாணார்பட்டியை அடுத்துள்ள கணவாய்பட்டி காதர் என்பவர் மகள் சமியாபானு (17) என்பவர் திருமணத்தையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

சமியாபானுவுக்கும் திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த சாகுல்ஹமீது மகன் நசீர்தீன் (25) என்பவருக்கும் நாளை 29–ந் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த திருமணத்தையும் சமூக நலத்துறை அதிகாரிகள் தலையிட்டு தடுத்து நிறுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பழனியில் நடத்தை சந்தேகத்தால் மனைவியை வெட்டி சாய்த்த கணவன்!!
Next post 2 மகன்களுடன் தாய் திடீர் மாயம்!!