பிரித்தானிய அரச குடும்பத்தில் மருமகளாக இன்னொரு கமீலா?
பிரித்தானிய இளரவரசர் ஹரி தனது மாற்றான் தாய் கமீலாவின் பெயரைக் கொண்ட பெண்ணிடம் காதல் வசப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் எடின்பேர்க் அழகுராணியும் விளையாட்டு வீராங்கனையுமான கமிலா துர்லோவே (25 வயது) இளவரசர் ஹரியின் மனதைக் கவர்ந்த புதிய காதலி என கூறப்படுகிறது.
கடந்த வாரம் இளவரசர் ஹரியும் கமீலா துர்லோவும் பிரான்ஸிலுள்ள சென் துரொபெஸ் பிராந்தியத்தில் ஆடம்பர படகில் உல்லாசமாக பொழுதைக் கழித்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் தனது முன்னாள் காதலியான கிரஸிடா பொனஸுடனான காதல் தொடர்பு முறிவடைந்து 3 மாதங்களின் பின்னர், டொன்ரெறியாவிலுள்ள கை பெல்லிஸ் இரவு விடுதியில் இளவரசர் ஹரியுடன் முத்தத்தை பரிமாறிக் கொண்டதாக கூறப்படும் மர்மப் பெண் கமீலா துர்லோவே என கூறப்படுகிறது.
அவர் லோபரோ பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி விஞ்ஞான பட்டக் கல்வியில் முதலாம் வகுப்பில் சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating