ஒரு தந்தை, இரு தாயைக் கொண்ட பெண்!!

Read Time:2 Minute, 20 Second

1fd4d4df-1eee-48e5-b148-d977a9d090c6_S_secvpfசோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது இன்று உலகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது. இந்த முறையில் பெண்ணின் சினை முட்டைகளையும், ஆணின் உயிரணுக்களையும் ஒன்று சேர்த்து கருவை வளரச் செய்கிறார்கள்.

எனினும் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக 2 பெண்களின் சினை முட்டைகளை ஒன்றாக கலந்து அவற்றை ஆணின் உயிரணுக்களுடன் சேர்த்து கருவை உருவாக்கும் மருத்துவ தொழில்நுட்ப முறையும் பல நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறையில் 30–க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆண்டுதோறும் பிறக்கின்றனவாம்.

ஆனால், இப்படி 3 பெற்றோர் இணைந்த குழந்தைகளை உருவாக்கும் முறைக்கு அமெரிக்கா கடந்த 2002–ம் ஆண்டு தடை விதித்தது. இங்கிலாந்து நாட்டிலும் இந்த தடை இருந்து வந்தது.

இப்போது ஒரு தந்தைக்கும், 2 தாய்க்கும் இடையே குழந்தை பிறப்பதை சட்டப்பூர்வமாக அனுமதிக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்து இருக்கிறது. இது தொடர்பாக விரைவில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தி சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

இதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு 3 பெற்றோர் மூலம் பிறந்த பெண்ணான ஆலானா சாரினென் (படத்தில் உள்ளவர்) மற்றும் 16 இளம்பெண்களின் உடல் நலம் பற்றியும், இவர்களுக்கு மரபு வழியில் நோய்கள் எதுவும் பரவுகிறதா? என்பது பற்றியும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஓட்டெடுப்பு நிறைவேறுவதன் மூலம் 3 பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சட்டப்பூர்வ அனுமதியை அளிக்கும் முதல் நாடாக இங்கிலாந்து திகழும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுபவர்கள் அதிகமாக கூச்சபட கூடியவர்கள்: ஆய்வில் தகவல்!!
Next post விபசாரத்தில் ஈடுபடுவதை ஏற்கமுடியாது!!