சார்ஜன்டின் அநாவசிய அழைப்பை மறுத்ததாலேயே தாக்கப்பட்டேன்!!

Read Time:3 Minute, 48 Second

1104876584Untitled-1அநாவசியமான அழைப்பை மறுத்ததாலேயே தான் தாக்கப்பட்டதாக, இரத்தினபுரியில் பொலிஸ் சார்ஜன்டால் தாக்குதலுக்கு இலக்கான பெண் தெரிவித்துள்ளார்.

குறித்த சார்ஜன் தன்னை சட்டவிரோதமாக தேவையற்ற இடங்களுக்கு அழைத்ததாகவும், எனினும் தான் அதை மூன்று முறைகள் நிராகரித்ததை அடுத்து, அவர் தன் மீது பழி உணர்ச்சி கொண்டிருந்ததாகவும், அப் பெண் அத தெரணவுக்கு வழங்கிய விஷேட செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தன்று கங்கா என்ற பெண்ணிடம் யோசனை வழங்கி தன்னுடன் சண்டையிட வைத்ததாகவும், இதன்போது அப்பெண் விடுத்த அழைப்பின் பேரில் அங்கு வந்த சார்ஜன்டிடம் தன்னைத் தாக்கும் படி குறித்த பெண் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தன்னை தகாத வார்த்தைகளால் திட்டிய சார்ஜன்ட் கடுமையாகத் தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

இதனையடுத்து இது குறித்து முறைப்பாடு செய்ய பொலிஸ் நிலையம் சென்றதாகவும், அங்கே தலைமை பொலிஸ் பரிசோதகர் இல்லாததால் திரும்பிவிட்டதாகவும் கூறிய அவர், பின்னர் அது குறித்து தான் சிந்திக்கவில்லை எனவும் அத தெரணவிடம் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை சுமார் எட்டு நாட்களுக்கு முன்னர் இரத்தினபுரி பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றதாக அப்பெண்ணின் கணவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தை அடுத்து தனது நெஞ்சுப் பகுதியில் அடிக்கடி வலி ஏற்படுவதாகக் கூறும் தன் மனைவி, இரத்தத்துடன் கூடிய வாந்தி எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் தாக்கியது பொலிஸ் என்பதால் பயத்தில் வைத்தியசாலைக்குச் செல்ல யோசிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்..

எனினும் இந்த சம்பவத்தை தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்த ஒருவர், அதனை சமூக வலைத் தளங்களில் பதிவு செய்ததை அடுத்து, இரத்தினபுரி உதவிப் பொலிஸ் உத்தியோகத்தர் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குறித்த சார்ஜன்ட் கண்டுபிடிக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த பெண் அந்த இடத்தில் தற்போது இல்லை எனக் கூறிய அவர், அவரைத் தேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கண்டுபிடித்ததும் அவரது சாட்சியைப் பதிவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சம்பந்தப்பட்ட சார்ஜன்ட் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே இரவில் 25 ஆண்களுடன் உறவுகொண்டு கனேடிய நகரை சர்ச்சைக்குள்ளாக்கிய மொடல்!!
Next post 3 வயது குழந்தை இறக்க – 5 பேருக்கு மறுபிறவி!!