பிரதமர் மோடியின் மாற்று விமானத்தில் வெடிகுண்டு!!!

Read Time:1 Minute, 36 Second

1923305500279504-narendramodiairindia700பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாற்று சிறப்பு விமானத்தில் வெடிக்காத குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து உயர்மட்ட அளவிலான விசாரணை நடைபெற்று வருகிறது. மும்பையிலிருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு செல்லும் போயிங் 747-400 விமானத்தில் இந்த வெடிக்காத குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஜெட்டா விமானத்துறை அதிகாரிகளால் சோதனையிடப்பட்டு பயணத்திற்கு உகந்தது என்று அனுமதிக்கப்பட்ட விமானத்தில் வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தற்போது ஜெட்டாவில் நிறுத்தப்பட்டுள்ள அந்த விமானத்தில் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விமானம் விரைவில் கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கட்டுநாயக்க அதிவேக வீதியில் வாகனங்கள் உள்நுழைய மட்டுப்பாடு!!
Next post பீகாரில் தசரா விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 33 பேர் பலி!!