By 14 October 2014 0 Comments

இப்போதும் கவர்ச்சியில் களை கட்டும் நாயகிகள்..!!

hotஹாலிவுட்டில் 40 வயதைக் கடந்தும் கில்லி மாதிரி நிற்கும் ஹாலிவுட் அம்மாடக்கர்கள் இவர்கள்…

ஷெரோன் ஸ்டோன்: அமெரிக்க மாடல் மற்றும் நடிகை. 90-களில் கிளாமர் பாம் என்றால் ஷெரோன்தான்.அடிக்கடி படங்களில் உள்ளாடை அணியாமல் சென்சேஷன் ஆக்குவார். நீண்ட கால்கள்இவரின் ப்ளஸ். பேசிக் இன்ஸ்டிக்ட் 1 மற்றும் 2, சில்வர், கேசினோ, தி குயிக்அண்ட் தி டெட் இன்னும் பல ஹாட் படங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். இரண்டுமுறை கல்யாணம் செய்துகொண்ட ஷெரோனுக்கு வயது 46. ஆனாலும் மவுசு குறையவில்லை.

லூசி லியூ: ‘சார்லீஸ் ஏஞ்சல்ஸ்’, ‘கில் பில்’ படங்களை சளைக்காமல் பார்த்த இந்தியரசிகர்கள் மத்தியில் லூசி செம பிரபலம். தயாரிப்பாளர், இயக்குநர், நடிகை, வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் என பல முகங்கள்கொண்ட லூசி குங்ஃபூ கலை பயின்றவர்.மார்பகப் புற்று நோய்க்காக விழிப்பு உணர்வு பிரசாரம் செய்துவரும் லூசிஅமெரிக்காவின் யுனிசெஃப் அமைப்பின் அம்பாசிடரும்கூட. லூசிக்கு 45 வயதுஎன்றாலும் லெஜென்ட் ஆஃப் தி நெவர்பீஸ்ட், குங்ஃபூ பாண்டா 3 , என அடுத்தவருடமும் லூசி பிஸி. லூசி ஒரு திறமையான ஓவியர். வருடா வருடம் தவறாமல் ஓவியகண்காட்சிகளும் நடத்திவருகிறார். உண்மையாவே நீங்க ஏஞ்சல்தான்!

நிக்கோல் கிட்மன்:ஆஸ்திரேலியநாட்டு அல்வா. டி.வி ஷோக்களில் தொகுப்பாளினியாக வாழ்க்கையைத் துவங்கியவர் 41 வயதைத் தாண்டியும் ‘நான்தான் டாப்பு மீதியெல்லாம் டூப்பு’ எனவரிசையாகப் படங்களில் புக்காகி வருகிறார். ஹாலிவுட்டின் டாப் ஹீரோ டாம்க்ரூஸை மணம் புரிந்தவர் 2001-ல் விவாகரத்து பெற்றார். 2006-ல் கெயித்அர்பனைத் திருமணம் செய்தார். ஐஸ் ஒயிட் ஷட், க்ரேஸ் ஆஃப் மொனாகோ, டெட்காம், தி அதர்ஸ் போன்ற படங்களில் அப்ளாஸ் அள்ளியவர் இன்னமும் முன்னணிஹீரோயின்.

ஜூலியா ராபர்ட்ஸ்:இவரின்படம் ஏதோ ஒன்று வெளியாகப் போகிறது என்றாலே அதை எல்லா மொழியிலும் அப்படியேகாப்பி அடிக்க பல முன்னணி இயக்குநர்களே தவம் இருப்பார்கள். அந்த அளவுக்குக்கதையின் நாயகி என்றால் அது ஜூலியாதான். 46 வயது ஆனாலும் என்ன பொண்ணுடா இவஎன பல இளசுகளின் கனவு தேவதை ஜூலியாதான். சவாலான பாத்திரங்களுக்கே சவால்கொடுக்கும் ஜூலியா உலகின் அதி அழகிய 50 பிரபலமானவர்களில் ஒருவராக 11 முறை ‘பீப்பிள்’ இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் உலகின் 100 ஹாட்நடிகைகள் லிஸ்டில் ஜூலியா ராபர்ட்ஸ் பெயர் எப்போதும் மிஸ் ஆகாது.

சாண்ட்ரா புல்லக்: 50 வயதான போதும் போன வருடம் வெளியான ‘க்ரேவிட்டி’ படத்துக்கு இவங்களுக்குஅகாடமி விருது கிடைக்கவில்லையே என புலம்பாத ஹாலிவுட் ரசிகர்களே கிடையாது.ஆனாலும் ஆறு அகாடமி விருதுகளைப் பெற்ற அந்தப் படத்தின் தூணே சாண்ட்ரா எனசொல்லலாம். 2012-ம் வருடம் அதிக சம்பளம் வாங்கும் உலகமகா நாயகி என கின்னஸ்ரெக்கார்டே அடித்தார். ‘தி ப்ளைண்ட் சைட்’ படத்துக்காகப் பல விருதுகளைப்பெற்றிருக் கிறார். ‘ஸ்பீட்’, ‘எ டைம் டு கில்’, க்ரேவிட்டி, ‘டூ வீக்ஸ்நோட்டிஸ்’ என பல ஹிட் லிஸ்ட் படங்கள் கொடுத்த சாண்ட்ரா அமெரிக்காவின் டாப்தொழிலதிபர்களில் ஒருவர்.

ஏஞ்சலினா ஜோலி:ஆஸ்கர் புகழ் ஏஞ்சலினா அமெரிக்கா, கம்போடியா என இரு குடியுரிமை பெற்றவர். ‘சால்ட்’, ‘வான்டட்’ போன்ற பல ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம்வாய்ந்த கதைகளில் கலக்கியவர். இப்போதும் பல இணையதளங்களின் நாயகி, செக்ஸிஃபிகர், பியூட்டி குயின் என எப்படி கேள்வி கேட்டு வாக்குப்பதிவுநடத்தினாலும் விடையாகக் கிடைப்பது ஏஞ்சலினாவின் பெயர்தான். நீங்கள்முத்தமிட விரும்பும் ஹீரோயின் யார் என்ற கேள்விக்கு 40 வயது ஏஞ்சலினாமட்டுமே என இன்னமும் இளசுகள் பதில் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஹால்லே பெர்ரி: 2006-ம் ஆண்டின் ‘உமன் ஆஃப் தி இயர்’ விருது பெற்ற கறுப்பு தங்கம். காற்றுமாசுபடுதல், மற்றும் கடல் வாழ்வாதாரம் பாதிப்புக்கு எதிராகக் குரல்கொடுத்த ஹால்லேவுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. ஹாலிவுட்டின் அத்தனைகிளிகளும் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடிக்க தவம் கிடக்கும்போது இவருக்குத்தானாகவே வீடு தேடி வந்த வாய்ப்பினை அசால்ட்டாக நிராகரித்து விட்டார்.காரணம் 007 படங்களில் ஹீரோயின்களுக்கு சரியான ஸ்கோப் இருக்காது என்பதால்.எனினும் பியர்ஸ் பிராஸ்னன் கேட்டுக்கொண்டதால் ‘டை அனதர் டே’ படத்தில்நடித்திருக்கிறார். அதுவும் 007 பட நாயகிகளிலேயே அதிக சம்பளம் வாங்கியநாயகி ஹால்லேதான். உலகின் ஹாட் நடிகைகள் லிஸ்ட்டில் தனக்கான இடத்தையாருக்கும் இதுவரை விட்டு கொடுக்காத ஹால்லேவுக்கு வயது 48.

ஜெனிபர் லோபஸ்:45 வயதிலும் இளசுகளின் நாடி நரம்பெல்லாம் நடனம் ஆட வைக்கும் ஜெனி பாப் உலகின்அரசி. மைக்கேல் ஜாக்சனுக்கே ஒரு கட்டத்தில் ஜெனி கடும் போட்டியாகமாறினார். பாப் உலகில் பல கலாசாரப் புரட்சியை உருவாக்கிய ஜெனிபரின்மியூசிக் ஆல்பம் ரிலீஸ் என்றால் இணையத்தில் லைக்ஸும் ஷேரிங்கும் கோடிகளைத்தொட்டு வைரலில் புதுப் புது சாதனைகளைத் தொடும். சமீபத்தில் ஓர் இணையதளம்இவருடைய அரிய நீச்சல் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு கோடான கோடி கண்களுக்குபிறவிப் பயனை அளித்தது.

உமா தர்மன்:ஹாலிவுட் விஜயசாந்தி. ‘கில் பில்’ படங்களில் கத்தியைச் சுழற்றி சுளுக்குஎடுக்கும் ஒவ்வொரு நொடியும் திக் திக் தான். ஏஞ்சலினாவைக் காட்டிலும்அதிகம் ஹீரோயின் முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்த உமாவுக்கு வயது 44 என்றாலும் சமீபத்தில் ஒரு ஹாலிவுட் பட விழாவின்போது இவரின் தோற்றத்தை பலபத்திரிகைகள் பாராட்டின.

‘வயசானாலும் ஸ்டைலும் அழகும் இன்னும் உங்கள விட்டுப் போகல’ டயலாக் இவங்க எல்லோருக்கும் கரெக்டா பொருந்துதே!Post a Comment

Protected by WP Anti Spam