மகாராஷ்டிரா, அரியானா வாக்குப்பதிவு ஆரம்பம்!!

Read Time:2 Minute, 1 Second

1520065888Untitled-1இந்தியாவில் உள்ள மிக முக்கிய மாநிலங்களுக்குள் ஒன்றான மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலம் சட்டபேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

காலை முதலே ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

வாக்குச்சாவடி மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரியானா மாநிலம் 90 தொகுதிகளை கொண்டது. காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் கீழ் உள்ள இங்கு தற்போதைய சட்டபேரவை 27-ஆம் திகதியுடன் காலாவதி ஆவதால் அதற்க்கு முன்பு தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

அதன்படி தேர்தல் இன்று நடைபெறுகிறது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தலைமை தேர்தல் ஆணையம் செய்திருக்கிறது.

இந்த தொகுதிகளில் மொத்தம் 1,051 வேட்ப்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்கள். இதில் பெண் வேட்பாளர்கள் 109 பேர் ஆவார்கள். மொத்தம் 1,63,18,577-பேர் வாக்களிக்கும் உரிமையை பெற்றவர்களாக இருக்கிறார்கள். இதில் 88,37,116- பேர் ஆண்கள் 74,79,439 பேர் பெண்கள் ஆவார்கள்.

வாக்குபதிவு ஆனது தற்போது அமைதியாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 16,357 வாக்குச்சாவடிகளில் 18,320 வாக்குப்பதிவு இயந்திரங்கள் உபயோகிக்கப்பட்டுள்ளன என அந்நாட்டு செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கலாமின் பிறந்தநாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்!!
Next post குளுகுளு சிறை அறையிலா உள்ளார் ஜெயலலிதா?