காரினுள் வைத்து 14 வயதுச் சிறுமியை கற்பழித்த IRA தலைவர்!!

Read Time:4 Minute, 21 Second

081bd3adbbeffa2b95e4ca5aaea97dd6 (1)IRA என்னும் அமைப்பு பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம். அயர்லாந்து விடுதலை இராணுவம் என்னும் இந்த அமைப்பு தமது பிரித்தானியாவிடம் இருந்து விடுதலைவேண்டும் என்று போராடி வந்தது. லண்டனில் பல குண்டுகள் வெடிக்க இந்த அமைப்பே காரணம். ஆனால் பின்னர் அவர்கள் தம்மை ஒரு அசரசியல் கட்சியாக மாற்றிக்கொண்டார்கள். பிரித்தானியாவும் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டது.

லண்டனில் பல இடங்களில் குண்டுவைத்த ஐ.ஆ.ஏ அமைப்புக்கு எதுவித தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால் 5000 மைல்களுக்கு அப்பால் உள்ள விடுதலைப் புலிகளுக்கு மட்டும் தடை விதித்துள்ளார்கள். இந்த அமைப்பின் முக்கிய தலைவராக இருந்த “ஜோ சாகில்” என்னும் நபர், தனது காரினுள் வைத்து 14 வயதுச் சிறுமியை கற்பழித்துள்ளார். இதனை பிரித்தானிய உளவுத்துறையினர் போட்டோ எடுத்துவிட்டார்கள்.

ஜோ சாகில் சிறுமிகள் பலரை இவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குகிறார் என்ற விடையத்தை நன்றாக தெரிந்துவைத்துள்ளது பிரித்தானிய அரசு. 1970 களில் பெரும் செல்வாக்கோடு இருந்த ஜோ சாகிலை, மடக்க பிரித்தானிய உளவுத்துறை அவரைப் பின் தொடர்ந்து சென்று இந்த போட்டோவை எடுத்துள்ளார்கள்.

பின்னர் அதனைக் காட்டி மிரட்டி அவரைப் பணியவைத்தும் உள்ளார்கள். நாங்கள் எந்த ஒரு வழக்கையும் தொடுக்க மாட்டோம். ஆனால் அயர்லாந்தில் நடப்பவை அனைத்தையும் நீங்கள் எமக்குச் சொல்லவேண்டும் என்று அவர்கள் மிரட்டி அடிபணியவைத்துள்ளார்கள். இதனால் ஜோ சாகில் பிரித்தானிய உளவுப் படையின் ஒரு ஏஜன்டாக மாறிவிட்டார்.

தற்போது ஐ.ஆர்.ஏ அமைப்பின் தலைவராக இருக்கும் சின் பெஃயின் போன்ற பெரும் தலைவர்கள், ஜோ சாகில் இறந்தவேளை அவர் சவப்பெட்டியை தோழில் தாங்கிச் சென்று அவருக்கு மரியாதை செய்தார்கள்.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள இந்த செய்தியால் அனைவரும் ஆடிப்போயுள்ளார்கள். அட இத்தனை வருடங்கள் கழித்து எப்படி இந்த பரம ரகசியம் வெளியில் வந்தது என்று நீங்கள் யோசிக்கலாம். எல்லாம் பிரித்தானிய உளவுத்துறையில் இருந்து ஓய்வுபெறும் நபர்கள் மூலமாக தான் வெளியாகியுள்ளது.

ஜோ சாக்கில் பிரித்தானியாவுக்கு உளவு பார்த்தது கூட பெரியவிடையம் இல்லை. ஆனால் அவர் சிறுமிகள் பலரை கற்பழித்தும் துஷ்பிரயோகங்களையும் செய்துள்ளார். இதனை அறிந்த பிரித்தானியா அது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லையே என்று பலர் விசனம் தெரிவித்துள்ளார்கள். சட்டத்தின் பிடியில் இருந்து ஜோ தப்பியுள்ளார்.

மேலும் அவர் எத்தனை சிறுமிகளை துன்புறுத்தினாலும் பரவாயில்லை, ஆனால் பிரித்தானியாவுக்கு தகவல் தேவை என்பது தான் பிரித்தானிய உளவுத்துறையின் ஒரே நோக்கமாக இருந்துள்ளது. அவர்கள் தமது நாட்டு சிறுமிகளை காப்பாற்ற தவறியுள்ளார்கள் என்றும் தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விரைவில் கோலி – அனுஷ்கா நிச்சயதார்த்தம்?
Next post இறந்த பாட்டியிடமிருந்து 3 வருடங்களின் பின் கிடைத்த SMS : மனநிலை பாதிக்கப்பட்ட பிரித்தானிய பெண்.!!