வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதுவுமில்லை: பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன்!!

Read Time:1 Minute, 39 Second

budget--sri-lankan-tea-workersஅரச ஊழியர்கள் விவசாயிகள் உட்பட சகல தரப்பினருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ள போதும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதுவித நிவாரணமும் வழங்கப்படவில்லை. இது வருத்தமளிப்பதாகவுள்ளதாக தாவரவியல் பூங்கா மற்றும் பொழுது போக்குத்துறை பிரதியமைச்சர் வே. ராதாகிருஷ்ணன் வீரகேசரிக்குத் தெரிவித்தார்.

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, மோட்டார் சைக்கிள்கள் நியாய விலையில் வழங்கப்படுவதாக வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் விவசாயிகளுக்கு இலவச விதை நெல் மற்றும் நெல் கொள்வனவு விலை அதிகரிப்பு போன்ற நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் எதுவித நிவாரணமும் வழங்கப்படாதது வருந்தத்தக்கது.

தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்பு திட்டம் தொடர்பாக மூன்று வருடங்களுக்கு முன்னர் வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இருந்தும் இத்திட்டம் இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் விசனம் தெரிவித்தார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கரூர் அருகே 9–ம் வகுப்பு மாணவன் தற்கொலை!!
Next post வரவு – செலவுத் திட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் நிராகரிப்பு: எம்.பி.யோகராஜன் கவலை!!