சடலம் பொதி செய்யும் 100 பைகளை வழங்கியது செஞ்சிலுவை சங்கம்!!

Read Time:1 Minute, 52 Second

1158340007red crossகொஸ்லாந்தை – மீறியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் பூணாகலை மற்றும் கொஸ்லாந்தை ஆகிய பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான நிவாரணங்களை அனைத்து சாராருடனும் இணைந்து முன்னெடுத்து வருவதாகவும் செஞ்சிலுவை சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சடலம் பாதுகாக்கும் 100 பைகளையும் செஞ்சிலுவை சங்கம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக இராணுவத்திடம் கையளித்துள்ளது.

இதுவரை மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் மண் சரிவுக்குள் 66 வீடுகள், சனசமூக நிலையம், பால் சேகரிக்கும் நிலையம் இரண்டு, இந்து கோவில், இரண்டு கடைகள் மற்றும் தொலைபேசி தொடர்பு கடை ஒன்றும் புதையுண்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மண்சரிவில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு நீண்ட கால உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளிநாட்டுக்கு கழிவுத் தேயிலை தூள் கடத்திய 14 பேர் கைது!!
Next post மீனவர்களுக்கு மரண தண்டனை: யாழ்., தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!!