கொடைக்கானலில் ஶ்ரீதிவ்யா – விக்ரம் முதலிரவு!!

Read Time:2 Minute, 5 Second

Untitled-141துள்ளாத மனமும் துள்ளும், மனம் கொத்தி பறவை போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் எழில் தற்போது விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிக்கும் ‘வெள்ளக்கார துரை‘ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் விக்ரம் பிரபு-ஸ்ரீதிவ்யா முதலிரவு காட்சி ஒன்றை சமீபத்தில் கொடைக்கானலில் எழில் படமாக்கினார்.

இதுகுறித்து எழில் கூறியபோது, எனது படங்களில் கமர்ஷியல் அம்சங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். ஆனால் அதே நேரத்தில் கமர்ஷியல் என்ற பெயரில் ஆபாசத்தை புகுத்த மாட்டேன். வெள்ளக்கார துரை படத்தில் விக்ரம் பிரபு-ஸ்ரீதிவ்யா நடிக்கும் முதலிரவு பாடல் காட்சி ஆபாசமின்றி குடும்பத்துடன் பார்க்கும்படியான காட்சிகள் படமாக்கப்பட்டது.

முதலிரவு பாடல் என்றாலே ஆபாசமும் விரசமும் இருக்கும் என பலர் நினைக்கின்றனர். அது தவறு என்பது எனது படம் ரிலீஸ் ஆனால் தெரியவரும். இதற்கு முன் நான் இயக்கிய எந்த படங்களிலும் ஆபாசமான காட்சிகள் இருக்காது. அதுபோலவே இந்த படம் டீசண்டாக குடும்பத்தோடு பார்க்கும்படியாக இருக்கும்.

சூரி, ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம்புலி, மதன்பாப், சிங்கமுத்து, ராஜேந்திரன், வனிதா, மதுமிதா என பலர் நடிக்கின்றனர். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்கிறார். வைரமுத்து பாடல்களுக்கு டி.இமான் இசை அமைக்கிறார். அன்புச்செழியன் தயாரிக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல ஆண்களை மணம் முடித்து, கொன்று, சொத்துக்களை அபகரித்த பாட்டி!!
Next post கோவையில் வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம்: பெண் புரோக்கர்கள் கைது!!