தலையில் பந்து தாக்கிய ஆஸி. வீரர் பிலிப் ஹியுஸ் உயிரிழப்பு!!

Read Time:2 Minute, 30 Second

285311433Untitled-1தலையில் பந்து பட்டதில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த, அவுஸ்திரேலிய அணியின் வீரர் பிலிப் ஹியுஸ் உயிரிழந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் முதல் தர போட்டியான ‘ஷெபீல்டு ஷீல்டு’ தொடரில் தெற்கு அவுஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் அணிகள் கடந்த 24ம் திகதி சிட்னியில் மோதின.

இப்போட்டியில் தெற்கு அவுஸ்திரேலிய அணி வீரர் பிலிப் ஹியுஸ் 63 ஓட்டங்களைக் கடந்த நிலையில், நியூ சவுத் வேல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் சியான் அபாட் வீசிய பவுன்சரை, ‘புல்’ ஷாட் அடிக்க முயன்றார்.

அப்போது, பந்து அவரது இடது காதின் மேலே தலை பகுதியில் பலமாக தாக்கியது. ‘ஹெல்மெட்’ பாதுகாப்பை கடந்து தாக்கியதால் ஹியுசின் தலையில் இரத்தம் கொட்டியது. சில வினாடிகளில் அப்படியே சுருண்டு கீழே விழுந்தார்.

இதைக்கண்ட வார்னர் உள்ளிட்ட சக வீரர்கள், மைதான ஊழியர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். மருத்துவ வசதிகள் அடங்கிய ‘ஹெலிகாப்டர்’, ‘ஆம்புலன்ஸ்கள்’ வரவழைக்கப்பட்டன.

வைத்தியர்கள் ஜான் ஆர்ச்சர்ட், ஹியுசுக்கு மூச்சை கொண்டு வர முயன்றார். இதற்கு பலன் கிடைக்க, ‘ஆம்புலன்ஸ்’ மூலம் உயர் சிகிச்சைக்காக, செயின்ட் வின்சன்ட் மருத்துவமனைக்கு ஹியுஸ் கொண்டு செல்லப்பட்டார்.

‘ஸ்கேன்’ செய்யப்பட்டதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இவருக்கு சத்திர சிகிச்சை செய்யப்பட்டது.

மூளைக்கு அழுத்தம் அதிகரிக்காமல் இருக்க, ஊசிகள் செலுத்தி மருந்துகள் உதவியுடன் ‘கோமா’ நிலையில் வைக்கப்பட்டிருந்த இவர் மரணமடைந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொதுபல சேனா இன்று அறிவிக்கும்: ஹெல உறுமய, ஸ்ரீமுகா, ததேகூ இன்னும் முடிவில்லை!!
Next post தெற்கு அதிவேக வீதியில் 3 வருடங்களில் 16 உயிர்கள் பலி!!