காலி சுகாதார ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!!
Read Time:1 Minute, 23 Second
காலி மாவட்டத்தில் ஆதார மற்றும் போதனா வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய வைத்தியசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் உள்ள ஊழியர்களும் இன்று முதல் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
காலி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மூடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் காலி மாவட்ட செயலாளர் கமல் கொடிகார தெரிவித்துள்ளார்.
காலி நகர சுகாதார வைத்திய அதிகாரி மாநகர சபை ஊழியர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தை அடுத்தே, காலி நகரசபை சூழலில் அமைந்துள்ள குறித்த அலுவலகத்தை மூடத் தீர்மானிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
எது எவ்வாறு இருப்பினும் நகர சுகாதார வைத்திய அதிகாரி இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating