சிம்பு சொதப்பல் – தவிக்கும் படக்குழு!!

Read Time:2 Minute, 2 Second

Untitled-153தனது படங்களுக்கு கால்ஷீட் சொதப்பி வருகிறார் சிம்பு. இதனால் அவரது படங்கள் தாமதமாகிறது.வேட்டை மன்னன், ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ என மூன்று படங்களை அறிவித்த சிம்பு, இதில் வாலு படத்தை தற்போதுதான் முடித்துள்ளார்.

‘இது நம்ம ஆளு’ படத்தின் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது. வேட்டை மன்னன் படம் தொடங்கிய வேகத்திலேயே முடங்கி கிடக்கிறது. ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ படங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருந்து வருகிறது.

வழக்கமாக ஷங்கர், பாலாவின் படங்கள் மட்டுமே இதுபோல் வருட கணக்கில் உருவாகும். அதற்கு காரணம், அவர்கள் ஒவ்வொரு காட்சியையும் நேர்த்தியாக எடுப்பதுதான். சிம்புவின் ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ படங்கள் தலா 3 முதல் 4 மாதங்களுக்குள் ஷூட்டிங் நடத்தி முடிக்க வேண்டிய படங்கள்.

ஆனால் இப்படங்கள் வருடக்கணக்கில் லேட்டாக சிம்புதான் காரணம் என கூறப்படுகிறது. ‘இது நம்ம ஆளு’, தனது சொந்த படமாக இருந்தாலும் ஷூட்டிங்கை தள்ளி வைத்துக்கொண்டே வருகிறாராம் சிம்பு. வாலு படத்துக்கும் இதேபோல் பல நாள்கள் ஷூட்டிங் நடக்கவில்லை. அந்த படத்துக்கு ஹன்சிகா கொடுத்த கால்ஷீட்டும் வீணானது. பிறகு இன்னொரு நாளில் அவரது கால்ஷீட்டை கேட்டபோது அவர் கொடுக்க மறுத்தார்.

இதனால் பிரச்சினையானது. ‘ கடந்த 2 ஆண்டுகளாக சிம்பு படங்கள் ரிலீசாகாமல் இருப்பதற்கு அவரேதான் காரணம் என புலம்புகிறது படக்குழு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜஸ்தானில் சொத்து தகராறில் மனைவியின் மூக்கு, விரல்களை துண்டித்த கணவன்!!
Next post நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு தாலிகட்ட முயன்ற வாலிபர் கைது!!