மைத்திரிபாலவுக்கு ஆதரவு தர, ததேகூவுக்கு கோரிக்கை..

Read Time:3 Minute, 21 Second

unp.harinஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு தெரிவித்து ஜாதிக ஹெல உறுமய உடன்பாடு ஒன்றிலும் கையெழுத்திட்டுள்ளது.

எதிரணியில் பௌத்த கடும்போக்கு அமைப்புகள் என்று கருதப்படும் கட்சிகளும், அமைப்புகளும் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிலைப்பாடு என்ன என்பது இன்னும் தெரியாத சூழலே உள்ளது.

இந்நிலையில் நாட்டில் ஆட்சி மாற்றம் தேவை என்றும் அதை ஏற்படுத்தும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டி அவர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது என்றும் அக்கட்சியின் துணைத் தலைவர் டி.எம்.சுவாமிநாதன் பிபிசியிடம் தெரிவித்தார்.

அந்த விஷயம் தொடர்பில் சில நெருடல்கள் இருக்கின்றன என்றும் அவற்றை களையும் வகையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன என்றும், தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவர்கள் எனக் கருதப்படும் ஹெல உறுமய, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவை தமது அணியில் உள்ளன என்பதை தாங்கள் உணர்ந்துள்ளதாகவும் சுவாமிநாதன் கூறியுள்ளது.

தேர்தலுக்கு பிறகு விட்டுக் கொடுப்புகள் பேச்சுவார்த்தை மூலம் சாத்தியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கக் கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனும் தமது தரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே மாகாண சபைகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் கொடுக்கும் எந்தப் பிரேரணையையும் தான் எதிர்ப்பதாகவும், முழுமையான சமஷ்டி முறை இலங்கையில் சாத்தியமில்லை என்றும் மைத்திரிபால சிறிசேனா கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து சுயாதீனமாக பிபிசியால் உறுதிசெய்ய முடியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகள் மீதான தடை: ஐரோப்பிய ஒன்றியம், மேன்முறையீடு
Next post தென்கொரிய கப்பலுக்கு நடந்தது என்ன – 50 பேர் பலி?