பேஸ்புக்கில் குவிந்த வாழ்த்து: மகிழ்ச்சியில் தத்தளித்த ஆட்டிஸம் பாதித்த சிறுவன் (வீடியோ இணைப்பு)!!
அமெரிக்காவில் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவனின் தாயார் ஒருவர் ஃபேஸ்புக் மூலம் தனது மகனுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கேட்டு பலரது உதவியை நாடியுள்ளார்.
வாஷிங்டனில் வசிக்கும் வில்லியம் (12) என்ற சிறுவன், ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டுள்ளான். தன் எண்ணங்களை எழுத்து மற்றும் சில சைகை மொழியின் மூலம் மட்டுமே வெளிப்படுத்தும் இந்த சிறுவன், எந்த முக்கிய விழாவுக்கும் சென்றதில்லை.
இந்நிலையில் இந்த வருட கிறிஸ்துமசுக்கு வாழ்த்துக் கடிதங்களை எதிர்பார்ப்பதாக அவன் தனது தாயிடம் தெரிவித்ததை அடுத்து, அந்த தாயார் ஃபேஸ்புக்கில் நண்பர்களது உதவியை நாடியுள்ளார்.
அதில், இதற்கு முன்னால் நான் யாரிடமும் எதுவும் கேட்டதில்லை. ஆனால் ஒரு தாயாக என் குழந்தையின் மகிழ்ச்சிக்காக இதைக் கேட்கத் தோன்றுகிறது.
என் மகன் வில்லியமுக்காக கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையோ, கடிதமோ எழுதி அனுப்புங்கள் என்று கேட்டுள்ளார்.
இதையடுத்து, தற்போது வில்லியமுக்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துக்களும், பரிசுப் பொருட்களும் குவிந்த வண்ணம் இருக்கிறது.
இதுபற்றி அந்த தாயார் கூறுகையில், முன்பு யாராவது அவனை திகைப்போடும் பார்த்தால், அவர்களிடம் இவனுக்கு என்ன நடந்ததென்று உங்களுக்குத் தெரிய வேண்டுமா? என்று கேட்கத் தோன்றும்.
ஆனால் இப்போது என் குழந்தையை அனைவரும் அன்போடு பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
Average Rating