ஐதேக தொகுதி அமைப்பாளர் மீது தாக்குதல்!!
குருநாகல் – ஹிரியால ஐக்கிய தேசியக் கட்சி தொகுதி அமைப்பாளர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஹிரியால சந்தியில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்த ஆசிரி ஹேரத் என்ற நபர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது ஆசிரியுடன் இருந்த அவரது மகனை சந்தேகநபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.