ஐதேக பொதுச் செயலாளராக கபீர் ஹசீம் நியமனம்!!
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுச் செயலாளராக இருந்த திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்தில் இணைந்து கொண்டதை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் கபீர் ஹசிம் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.