கிரடிட்காட் மோசடியில் ஈடுபட்ட 4 இலங்கையர் உட்பட ஐவர் கைது!!

Read Time:2 Minute, 7 Second

116814431Untitled-1கிரடிட் காட் மோசடி தொடர்பில் இலங்கையர்கள் நால்வர் உள்ளிட்ட ஐவர் தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வங்கி ஒன்றினால் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலத்தில் வழங்கப்பட்ட புகாரில், “சிலர் வெளிநாட்டினர்களின் ஏடிஎம், கிரெடிட் கார்டுகளின் இரகசிய எண்களை திருடி, போலி கார்டுகளை தயார் செய்து தங்கள் வங்கி மூலம் பணம் எடுத்துள்ளனர்.

வணிக நிறுவனங்களில் பொருட்களையும் வாங்கி பல இலட்ச ரூபாய்களை மோசடி செய்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இதன்படி, மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவு பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் இறங்கினர்.

அதில், மடிப்பாக்கத்தில் வசித்து வரும் இலங்கை தமிழர்களான ஆனந்தன் என்ற ரூபன் (45), திஷோக் குமார் (28), தினேஷ் குமார் (27), கிருஷ்ணதாஸ் என்ற முருகன் (52) மற்றும் நாகூரைச் சேர்ந்த தஸ்லின் (24) ஆகியோர் இதுபோன்ற மோசடி வேலைகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்கள் ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இவர்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட போலி கிரெடிட் கார்டுகள், கார்டு தயாரிக்க பயன்படுத்திய கருவிகள், சொகுசு கார், மடிக்கணனிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட ஐவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமங்கலத்தில் 6 வயது சிறுமியிடம் சில்மிஷம்: யோகா மாஸ்டர் கைது!!
Next post மகளின் காதலை பிரிப்பதாக கூறி தாயிடம் செக்ஸ் அனுபவித்து ரூ.15 லட்சம் பறித்த மந்திரவாதி கைது!!