நீங்களும் உங்கள் காதல் பொக்கிஷங்களை நிலவுக்கு அனுப்பலாம்!!

Read Time:2 Minute, 48 Second

Untitled-111காதலிக்காக நிலாவைக் கையில் பிடித்துத் தரும், காதல் பாடலை எத்தனையோ முறை கேட்டிருப்போம். அதே போல் நமது மண்ணில் வாழும் சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரும் நீ கேட்டால் நான் நிலாவையே கொண்டு வந்து தருவேன் என்று கூறுவது உண்டு. ஆனால் நம்முடைய காதல் நினைவுகளை நிலவில் அழியாமல் வைக்கவேண்டும் என்று நாம் என்றும் யோசித்ததில்லை.

இனி அப்படி யோசித்து காதல் நினைவுகளை நிலவில் கால் பதிக்க நீங்கள் நினைத்தால், உங்களது ஆசையை நிறைவேற்ற முன் வந்துள்ளது அமெரிக்க நிறுவனமான ஆஸ்ட்ரோபோடிக்.

நிலவுக்கு தபால்களை அனுப்பும் ’மூன் மெயில்’ என்ற சேவையை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பட்டமளிப்பு, திருமணம் மற்றும் பிறந்த நாள் என்று அன்புக்குரியவர்களுடனான நமது நினைவுகளை என்றும் பல நூற்றாண்டுகள் நிலவில் அழியாது காக்க முடியும் என்று நம்பிக்கையை இந்த நிறுவனத்தின் மூன் மெயில் சேவை நமக்கு அளிக்கிறது.

உலகின் எந்த மூலையிலுள்ள மக்களும் ஆஸ்ட்ரோபோடிக்கின் நிலவில் தரையிறங்க இருக்கும் விண்கலம் மூலம் தங்கள் நினைவு சின்னங்களை அனுப்பலாம் என அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜான் தோர்ன்டன் தெரிவித்தார்.

இதுகுறித்து அந்நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்ட தகவலின் படி, தற்போது சிறிய அளவிலான நினைவு சின்னங்களை தன் முதல் நிலவுப் பயணத்திற்காக சேகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும், ’மூன் கேப்சூல்’ எனப்படும் நிலவில் நமது பொருளை பாதுகாக்க பெட்டகம் ஒன்று தரப்படும் எனவும் தகவல் வெளியிட்டுள்ளது.

நாம் அனுப்ப நினைக்கும் பொருளின் எடைக்கேற்ப 460 டொலர் முதல் 26000 டொலர் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்கலம் தரையிறங்கிய உடன் நம் நினைவுச்சின்னத்தின் புகைப்படமும், வீடியோவும் நமக்கு அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அன்புரொக்கன் ப்ரீமியரை தவறவிடும் ஏஞ்சலினா!!
Next post என்னிடம் அப்படி நடந்து கொண்டால்? பொங்கும் ஸ்ருதி!!