இறந்த குழந்தையின் இதயத்தை தானம் தந்த பெங்களூர் பெற்றோர்: தானம் பெற்ற சென்னை பெற்றோர்!!
பெங்களூரில் இன்று காலை தங்கள் குழந்தையை இழந்த பெற்றோர், இறந்த குழந்தையின் இதயத்தை இதய மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் சென்னையில் உள்ள மற்றொரு குழந்தைக்கு கொடுக்க முன் வந்தனர்.
உடனடியாக இதயத்தைப் பாதுகாப்பதற்கான பிரத்தியேக மருத்துவ உபகரணங்களுடன் மருத்துவமனை ஆம்புலன்ஸ் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பெங்களூர் விமான நிலையத்திற்குப் புறப்பட்டது. ஆம்புலன்ஸை போக்குவரத்து நெரிசலின்றி கொண்டு செல்ல காவல் துறையினர் 25 காவலர்களை நியமித்தனர். அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் நான்கு மணி நேரத்தில் சென்னை வந்து சேரும் குழந்தையின் இதயம் அடையாரில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு குழந்தைக்குப் பொருத்தப்பட உள்ளது. சென்னையில் தாமதம் ஏற்படாமல் இருக்க சிறப்புப் பாதை ஒன்றும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
குழந்தை இறந்ததும் முதலில் உடைந்து போய் அழுத பெற்றோர், இன்னொரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இந்த முடிவை எடுத்த சம்பவம் மன நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.