திருடர்கள் நடமாட்டம்: அதிகாலையில் கோலம் போடும் பெண்களே உஷார்!!

Read Time:2 Minute, 16 Second

e32153be-6545-4fa8-9ffc-c14a66a5b693_S_secvpfசங்கிலி பறிப்பு திருடர்களிடம் இருந்து தப்பிக்க பெண்கள் அதிகாலையில் கோலம் போடும்போது உஷாராக இருக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பில் பொது மக்களுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 6 கட்டளைகள் அடங்கிய துண்டு பிரசுங்களை புதுக்கோட்டை நகரில் பொது மக்கள் மத்தியில் போலீசார் விநியோகித்து வருகின்றனர். அதில் கூறியிருப்பதாவது:–

அதிகாலை நேரங்களில் பெண்கள் கோலம் போடுவதை தவிர்த்து நன்றாக விடிந்த பின் சூரிய வெளிச்சம் வந்த பின் கோலம் போடவும்.

அதிகாலை நேரங்களில் கோலம் போடும் சூழ்நிலை ஏற்பட்டால் துணைக்கு வீட்டு ஆண்களை உடன் வைத்துக் கொள்ளவும்.

சேலை அல்லது துப்பட்டா மூலம் கழுத்தை சுற்றி பாதுகாப்பாக போட்டுக் கொள்ளவும். வீட்டு வாசலில் நல்ல வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

இரண்டு சக்கர வாகனத்திலோ, நடந்தோ சந்தேகப்படும் படியான நபர்கள் வந்தாலோ, முகவரியோ, குடிக்க தண்ணீர் கேட்டாலோ எச்சரிக்கையாக இருக்கவும், அதோடு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளவும். பனிக்குல்லா மற்றும் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் யாரேனும் வந்தால் உஷாராக இருக்கவும்.

சந்தேகம் ஏதும் இருந்தாலோ, சம்பவம் நடந்தாலோ உடனே அவரச போலீஸ் எண் 100 அல்லது புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டு அறை எண் 04322– 222236 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளவும்.

இவ்வாறு அந்த துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்புவனம் அருகே முள்படுக்கையில் படுத்து பெண் சாமியார் பக்தர்களுக்கு ஆசி!!
Next post இரசிகைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்!!