நான் சினிமாவில் சாதிக்க வலுவான அடித்தளம் அமைத்தவர் பாலச்சந்தர்: ரஜினிகாந்த் பேட்டி!!

Read Time:3 Minute, 42 Second

ec6bc49f-7457-4a79-af41-963c81803b0d_S_secvpfநடிகர் ரஜினிகாந்த் மறைந்த டைரக்டர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் என்பது எல்லோரும் தெரிந்த விஷயம். அறிமுகம் செய்ததுடன் மட்டும் அல்லாமல் அடுத்தடுத்து தனது படங்களில் ரஜினிக்கு வாய்ப்பு கொடுத்து மெருகேற்றினார் என்பதில் சந்தேகம் இல்லை.

மூன்று முடிச்சு, அவர்கள், தப்புத்தாளங்கள் படங்கள் இதற்கு சாட்சி. கடைசிவரை தனது குருநாதர் பாலச்சந்தரை ரஜினிகாந்த் ஒரு நாளும் மறந்ததில்லை. நன்றி கடனுக்காக பாலச்சந்தரின் தயாரிப்பு நிறுவனத்துக்காக ரஜினி பல படங்கள் நடித்து கொடுத்து இருக்கிறார்.

பாலச்சந்தரின் மறைவு ரஜினியை ரொம்பவே பாதித்து விட்டது. சொந்த தந்தையை இழந்தது போன்ற தவிப்பால் உள்ளார். பாலச்சந்தர் பற்றி ரஜினிகாந்த் அவ்வப்போது தனது அனுபவங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.

தன்னை எப்படி பாலச்சந்தர் மெருகேற்றினார் என்று ரஜினி கூறியதாவது:– ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல், பழக்க வழக்கம் இருக்கும். அதை கண்டு பிடித்துவிட்டால் அது வெற்றி பெறும். அதுபோல் எனக்குள் இருந்த ஸ்டைல் பழக்க வழக்கங்களை பாலச்சந்தர் நடிப்பாக மாற்றினார். அவரையே மற்ற நடிகர்களைப் பார்த்து அவர்களை காப்பி அடித்து நடிக்க கூடாது. தனக்கென தனி பாணியில் நடிக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வார். டைரக்டர் ஷங்கரை எடுத்துக் கொண்டால், நடிகர் விக்ரம் உடல் அமைப்பை ஏற்றம் இறக்கம் செய்து கொண்டு நடிக்க வைத்துள்ளார். அது விக்ரமால் முடிகிறது. அதை ஷங்கர் செய்ய வைக்கிறார். அது போல் என்னால் உறுதியாக செய்ய முடியாது. ஒவ்வொரு ரசிகரும் தங்களது அபிமான நடிகர்கள் எப்படி நடிக்க வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அதை நடிகர்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

நடிப்பில் எனக்கென்று நான் எந்த வரையரையும் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் எனக்கு நடிப்பில் டைரக்டர் பாலச்சந்தர்தான் சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். அதுதான் என்னை இந்த உயர்ந்த நிலையை அடைய வைத்தது. ஒவ்வொருவரைப் போல் நடிகர்களுக்கும் கால நேரத்தில் மாற்றம் வரும் அதற்கு ஏற்றார் போல் நடிகர்கள் தங்களை மாற்றிக் கொண்டு மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப நடிக்க வேண்டும். ஒரு நடிகருடன் சினிமா உலகம் நின்று விடாது. என்னைப் பொருத்தவரை எனக்கு கடவுளின் பலமான அனுக்கிரகம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதுதான் எனது நடிப்புக்கு உதவுகிறது. நல்ல படங்களில் நடிக்க வைக்கிறது. இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளிநாடுகளில் இணையதளத்தில் வெளியாகும் லிங்கா!!
Next post கேங்ஸ்டர் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!!