சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழங்கியதாக வழக்கு: 3 பேருக்கு காவல் நீட்டிப்பு!!

Read Time:1 Minute, 24 Second

21b689b4-51a6-4579-a8a2-9c463b1e7829_S_secvpfமத்திய மந்திரியாக தயாநிதி மாறன் பதவி வகித்த போது, தன் சகோதரர் கலாநிதிமாறன் நடத்தும் சன் டி.வி. நிறுவனத்துக்கு சட்ட விரோதமாக தொலைப்பேசி இணைப்புகளை வழங்கியதாகவும், இதன்மூலம் அரசுக்கு பெரும் தொகை இழப்பு ஏற்பட்டதாகவும் கூறி சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. போலீசார், கடந்த மாதம் தயாநிதிமாறனின் முன்னாள் உதவியாளர் கவுதமன், சன் டி.வி. ஊழியர்கள் கண்ணன், ரவி ஆகியோரை கைது செய்தனர். பின்னர், சென்னையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரையும் சிறப்பு கோர்ட்டில் இன்று போலீசார் ஆஜர்படுத்தினார்கள். இதையடுத்து, 3 பேரையும் வருகிற 18–ந் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கும்படி, நீதிபதி உத்தரவிட்டார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது!!
Next post ராஜபாளையம் அருகே கழுத்தை நெரித்து மனைவியை கொன்ற தொழிலாளி!!