எல்லை மீறிய ஆபாசத்தால் இந்தியாவில் தடை!

Read Time:1 Minute, 37 Second

Dakotaபல நாடுகளில் வெற்றிகரமாக ஓடி வரும் ‘பிப்டி ஷேட்ஸ் ஆப் க்ரே’ படம் இந்தியாவில் தடை செய்யப்படுள்ளது.

கடந்த மாதம் இறுதியில் உலகம் முழுவதும் வெளியாகி 260 மில்லியன் பவுண்ட் (ரூபாய் 2 ஆயிரத்து 484 கோடி) வசூல் செய்த திரைப்படம் ‘பிப்டி ஷேட்ஸ் ஆப் க்ரே’. ஜமி டொர்னான், டகோடா ஜான்சன் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் இருவருக்கும் இடையே உள்ள அதீதமான காதலை வெளிப்படுத்தும் வகையில் நேரடியான உடலுறவுக் காட்சிகள் பல உள்ளது.

இந்நிலையில் திரைப்படத்தைப் பார்த்த இந்திய திரைப்பட தணிக்கைக்குழு படத்தில் உள்ள நிர்வாணக்காட்சிகள் அனைத்தையும் நீக்கிய பிறகும்கூட இது இந்திய ரசிகர்களுக்கு ஏற்றதல்ல என்று கூறி இப்படத்தை தடை செய்துள்ளது.

ஜேம்ஸ் என்ற எழுத்தாளரின் புதினத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் மலேசியா, இந்தோனேசியா, கென்யா போன்ற நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது. திரைப்படத்தை தணிக்கை செய்த மலேசிய தணிக்கைக்குழு “இது நீலப்படத்தை விட மோசமான படம்” என்றது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலியல் குற்றவாளி கொலை – வதந்திகள் பரவுவதை தடுக்க இண்டர்நெட் மற்றும் எஸ்.எம்.எஸ் சேவை முடக்கம்: நாகலாந்து அரசு!!
Next post இடத்தகராறில் பெண் சப்–இன்ஸ்பெக்டரை தாக்கி கொல்ல முயற்சி: தந்தை– மகன் கைது!!