சுகப்பிரசவத்துக்காக தினமும் 5 கி.மீ தூரம் ஓடும் 7 மாத கர்ப்பிணி!!
தெலுங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்தவர் ரவீந்திரர். தடகள வீரர். ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் பல பதக்கங்களை பெற்று உள்ளார். இவரது மனைவி லட்சுமி (42). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் லட்சுமி மீண்டும் கர்ப்பம் தரித்தார். தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இவர் சுகப்பிரசவத்துக்காக தினமும் 5 கிலோ மீட்டர் ஓடுகிறார். 7 மாத கர்ப்பிணி ஓடுவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி லட்சமி கூறியதாவது:–
எனது கணவர் ஓட்டப் பந்தய வீரர். அவர் மூலம் நானும் தினமும் ஓடி வருகிறேன். முதல் குழந்தை உண்டான போது தினமும் ஓடுவேன், சுகப்பிரசவம் ஏற்பட்டது.
இப்போது 2–வது குழந்தையும் சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் என்பதற்காக கணவருடன் தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் ஓடி வருகிறேன்.
7 மாத கர்ப்பமாக இருந்த போதிலும் எனது முயற்சியை கைவிடவில்லை. இது பற்றி டாக்டரிடம் ஆலோசனை கேட்டேன். அவர்கள் உங்களால் முடிந்தால் முயற்சி செய்யுங்கள் என்றார். எனவே ஓட்டப்பயிற்சியை விடாமல் செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உலக மகளிர் தினத்தை யொட்டி நேற்று லட்சுமி உஜ்வல பார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் குழந்தையை தூக்கிக் கொண்டு 80 படிகள் ஏறி சாதனை படைத்தார்.