சொன்னா போச்சு (திரைவிமர்சனம்)!!

Read Time:4 Minute, 14 Second

sonna2சென்னையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, வித்தியாசமான நிகழ்ச்சிகளை படம் பிடிக்க முயற்சி செய்கிறது. அதன்படி, தோகைமலை உச்சியில் உள்ள கிராமத்தில் காளி கோவில் உள்ளது என்றும் அங்கு இளம் பெண்களை வைத்து நிர்வாண பூஜை நடத்துவதாகவும் தகவலை அறிகின்றனர். இதனால் பத்து பேர் கொண்ட குழு தோகை மலைக்கு செல்கின்றனர்.

அங்கு மலைவாழ் மக்கள் இவர்களை ஊருக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள். ஆனால் மீடியா குழுவினர் திருட்டுதனமாக காட்டு வழியாக நுழைகிறார்கள். செல்லும் வழியில் ஒரு கல்வெட்டு இவர்களுக்கு கிடைக்கிறது. இதைப் பற்றி தெரிந்துக் கொள்ள, கல்வெட்டு ஆராய்ச்சியாளரான பிசிஎம்மை அழைக்கிறார்கள்.
பிசிஎம் அந்த கல்வெட்டை பார்த்து, காளி கோவிலுக்கு உள்ளே சாமி சிலைக்கு கீழே பல லட்சம் மதிப்புள்ள புதையல் இருப்பதை அறிகிறார். இந்தப் புதையலை யாருக்கும் தெரியாமல் அபகரிக்க திட்டமிட்டு மீடியா குழுவினருடனே சேர்ந்து தொகை மலைக்கு செல்கிறார்.

இவர்கள் தோகை மலைக்கு செல்லும் வழியில் குழுவில் உள்ள ஒரு பெண் மர்மான முறையில் கொல்லப்பட்டு காணாமல் போகிறார். இதனால் அவர்கள் அதிர்ந்து போகின்றனர். இதன் தொடர்ச்சியாக மற்றொரு நபரும் கொலை செய்யப்பட்டு காணாமல் போகிறார். இதன்பிறகு குழுவில் உள்ள சிலர் தோகை மலைக்கு செல்ல தயங்குகின்றனர்.
இறுதியில் இந்த கொலைகளை செய்தது யார்? பிசிஎம் புதையலை எடுத்தாரா? நிர்வாண பூஜையின் மர்மங்கள் கண்டறியப்பட்டதா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் புதுமுகங்கள். அனைவரும் நடிக்க மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்கள். தெரிந்த முகங்கள் என்று சொன்னால் மனோபாலா மற்றும் ஆர்த்தி. இவர்களை வைத்து தனி டிராக்காக காமெடி காட்சிகளை வைத்திருக்கிறார்கள். அது பெரிதாக எடுபடவில்லை. ஆராய்ச்சியாளராக வரும் பிசிஎம் சிறப்பாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.

கோவில், புதையல், மர்மம் என்று பழைய கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் சாய்ராம் அதில் திகில் கலந்து சொல்ல முயற்சி செய்திருக்கிறார். படத்தில் நிறைய தேவையற்ற காட்சிகள், லாஜிக் இல்லாத காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. திரைக்கதையை நாடகம் போல் காட்சியமைத்திருக்கிறார். இவற்றையெல்லாம் இயக்குனர் தவிர்த்திருக்கலாம். நிறைய கதாபாத்திரங்கள் படத்திற்கு தேவையில்லாமல் இருப்பது போல் தோன்றுகிறது. குறைந்த கதாபாத்திரங்களை வைத்து அவர்களை திறமையாக வேலை வாங்கியிருந்தால் படத்தை ரசித்திருக்கலாம்.

அரா-பிசிஎம்மின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையை மட்டுமே ரசிக்க முடிகிறது. மனோஜ் நாராயன் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘சொன்னா போச்சு’ சொல்லாமலே போச்சு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாகர்கோவில் அருகே காதலன் ஏமாற்றியதால் கல்லூரி மாணவி தற்கொலை!!
Next post கல்விக்கு வயது ஒரு தடையில்லை: 62 வயதில் பிளஸ்-1 தேர்வு எழுதும் பெண்!!