நெல்லை அருகே குடும்பத்துடன் விஷம் குடித்த விவசாயியின் மனைவியும் பலி: மகனுக்கு தீவிர சிகிச்சை!!

Read Time:2 Minute, 40 Second

1c48be69-8190-40c9-8ab9-b998092d9e2f_S_secvpfநெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள கள்ளம்புலி கிராமத்தைச்சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 52) விவசாயி. இவரது மனைவி சூரியகாந்தி (47). இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் கழித்து சுடலைகனி என்ற மகன் பிறந்தான். தற்போது சுடலைகனிக்கு 15 வயதாகிறது. 10–ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் சுடலைகனிக்கு அடிக்கடி காய்ச்சல் வந்ததால் டாக்டர்களிடம் பரிசோதித்தனர். அப்போது சுடலைமணியின் ‘‘கிட்னி’’ பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதற்கு ஆப்பரேசன் செய்ய பல லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளனர்.

இதனால் மனம் உடைந்த மாணிக்கம், மனைவி சூரியகாந்தி மகன் சுடலைகனி ஆகியோருடன் சேர்ந்து குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்வது என்று முடிவு செய்தார்.

அதன்படி 3 பேரும் நேற்று விஷம் குடித்து வீட்டுக்குள் மயங்கினர். நேற்று காலை சுடலைமணிக்கு 10–ம் வகுப்பு தேர்வு தொடங்கியதால், சக மாணவர்கள் அவரை கூப்பிட வந்தனர்.

அப்போது தான் அவர்கள் குடும்பத்துடன் விஷம் குடித்தது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தெரியவந்தது. சம்பவ இடத்திலேயே மாணிக்கம் பரிதாபமாக இறந்து கிடந்தார். சூரியகாந்தியும், அவரது மகன் சுடலைகனியும் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். அவர்களை மீட்டு பாளை. ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று நள்ளிரவு சூரியகாந்தியும் பரிதாபமாக இறந்தார். கணவன்–மனைவி 2 பேரும் பலியானதால் அவர்களது உறவினர்கள் கதறி துடித்தனர். 20 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற அவர்களது மகன் சுடலைகனியின் உயிரும் ஊசலாடுகிறது. ஏற்கனவே அவனுக்கு கிட்னியும் பாதிக்கப்பட்டு இருந்ததால் டாக்டர்கள் உயிரை காப்பாற்ற தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற, சில கூட்டமைப்பு சார்ந்த சிலரினால் வதந்திகள் பரப்பப்படுகின்றது.. -“புளொட்” தலைவர் த.சித்தார்த்தன்!!
Next post “போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி” என்ற பெயரில் இடம்பெறும், உள்வீட்டு அதிகாரச் சண்டை! (கட்டுரை)!!