வரதட்சணையாக கார் கேட்ட ராணுவ வீரருக்கு 2 ஆண்டு திருமண தடை- ரூ.81 ஆயிரம் அபராதம்: கிராம பஞ்சாயத்து தீர்ப்பு!!

Read Time:1 Minute, 30 Second

e9124414-3e8f-436f-a1fb-5b87f257df48_S_secvpfஉத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டம் ரசூல்பூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரருக்கும் காசிம்பூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் வரும் 24-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், ஏற்கனவே சீர்-செனத்தி பற்றி பேசி முடிவு செய்து விட்டோம். இப்போது, திடீரென்று மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக கார் தர வேண்டும் என சம்பந்தி வீட்டார் எங்களை நிர்ப்பந்திக்கின்றனர் என பெண்ணின் பெற்றோர் உள்ளூர் பஞ்சாயத்தில் முறையீடு செய்தனர். இரு தரப்பினரையும் நேற்று மாலை அழைத்து விசாரித்த பஞ்சாயத்தார் சம்பந்தப்பட்ட ராணுவ வீரர் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு திருமணமே செய்து கொள்ளக்கூடாது என்று தீர்ப்பளித்தனர்.

அதுமட்டுமின்றி, பேராசை எண்ணத்துடன் வரதட்சணையாக கார் கொடுக்க வேண்டும் என்று கேட்ட குற்றத்துக்காக மாப்பிள்ளை வீட்டாருக்க்கு 81 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரசவித்த இரண்டே மணி நேரத்தில் பி.ஏ. தேர்வு எழுத ஆஜரான புதுமைப் பெண்!!
Next post வேலை நாளில் பூட்டிக்கிடந்த பள்ளிக்கூடங்கள்: 4 தலைமை ஆசிரியைகள் சஸ்பெண்ட்!!