முதியவரை அடித்துக் கொன்ற நண்பரின் மகன்!!
மகாராஷ்டிர மாநிலம் தானேயில் 62 வயதான முதியவர் ஒருவரை, அவரது நண்பரின் மகனே அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தானே நகரில் உள்ள திகுஜினி வாடி பகுதியில் வசித்து வருபவர் தத்து வாக்மேர்(23). இவர் நேற்றிரவு தனது அப்பாவின் நண்பரான தத்யா நிகமை தனது வீட்டிற்கு அழைத்து சென்று அவருக்கு இரவு உணவு வழங்கினார். இரவு உணவை முடித்துக் கொண்ட பிறகும் நிகாம் அங்கிருந்து வீட்டிற்கு கிளம்ப மறுக்கவே இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் நிகாமின் பேச்சினால் ஆத்திரமடைந்த தத்து, அருகிலிருந்த மரப்பலகையால் நிகாமைத் தாக்கினார். இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போன நிகாம் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து, உயிரிழந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.