புற்று நோய் சக்கர நாற்கலியில் வீழ்த்தினாலும் மனோதிடத்தால் 3 முறை தேசிய ஆணழகனான ஆனந்த் அர்னால்ட்!!

Read Time:3 Minute, 27 Second

db530f8c-e420-4c82-b99c-363f6bbb3542_S_secvpfபஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா நகரை சேர்ந்தவர் பிரின்ஸ் அர்னால்ட். இவரது மகனான ஆனந்த அர்னால்ட் தனது பதின்மூன்றாம் வயதில் உடற்பயிற்சி மீது ஏற்பட்ட அதீத காதலினால் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து ஓராண்டுக்குள் ‘மிஸ்டர் கோல்ட்’ பட்டத்தை வென்றார்.

அடுத்து, மாநில ஆணழகன் பட்டம், அதற்கடுத்து தேசிய ஆணழகன் பட்டம், அதனையும் அடுத்து உலக ஆணழகன் பட்டம் என்ற எதிர்கால திட்டத்துடன் இன்னும் வெறித்தனமாக உடற்பயிற்சியில் ஈடுபட்ட ஆனந்துக்கு 15 வயதில் முதுகுப்பகுதியில் கொடூரமான வலி தோன்றியது.

டாக்டர்களிடம் சிகிச்சைக்காக சென்றபோது முதுகெலும்பு பகுதியில் புற்றுநோய் தாக்கி இருக்கும் அதிர்ச்சி செய்தி ஆனந்தை நிலைகுலைய வைத்தது. அடுத்தடுத்து செய்யப்பட்ட ஆபரேஷன்களின் விளைவாக இடுப்புக்கு கீழே எந்த உடலுறுப்பும் செயல்படாத நிலையில் ஆனந்தின் ஆகாசக் கோட்டைகளும், எதிர்கால திட்டங்களும் ஒரு சிறிய சக்கர நாற்காலிக்குள் முடங்கிப் போயின.

’இடுப்புக்கு கீழே செயலற்றுப் போனவர்’ என்பதை அறிந்த அவருக்கு நெருக்கமான உயிர்த்தோழி ஆனந்தை உதறி விட்டார். எனினும், தன்னம்பிக்கையை இழக்காத ஆனந்த் அர்னால்ட், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே மிக கடுமையான பயிற்சிகளை எல்லாம் செய்து ஹாலிவுட் அர்னால்டுக்கு இணையாக உடற்கட்டை மெருகேற்றினார்.

அவரது விடாமுயற்சிகளுக்கு எல்லாம் பெற்றோருடன் சேர்ந்து மூன்று சகோதரிகளும் உறுதுணையாக இருந்ததையடுத்து, சக்கர நாற்காலி ஆணழகன் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்றார். மிகக் குறுகிய காலத்தில் 3 முறை தேசிய ஆணழகன் பட்டங்களையும், 12 முறை பஞ்சாப் மாநில ஆணழகன் பட்டத்தையும், மேலும் 27 இதர பட்டங்களையும் வென்றுள்ள ஆனந்த் அர்னால்டுக்கு தற்போது வயது 28.

பலவீனங்களையே பலமாக மாற்றிக் கொண்டால் வெற்றி நிச்சயம் என தனது தன்னம்பிக்கையால் உலகுக்கு உணர்த்தியுள்ள ஆனந்த் அர்னால்ட், லூதியானா நகரில் உடற்பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். உலகின் மிகப் பிரபலமான நிறுவனங்கள் தயாரிக்கும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கான சத்துணவு வகைகள் மற்றும் உடற்பயிற்சி கருவிகள் போன்றவற்றின் விளம்பர தூதராகவும் உள்ள ஆனந்த் அர்னால்ட், எனது வாழ்க்கையை சினிமாவாக எடுக்க ஆசைப்படுகிறேன் என கூறுகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடும்பத்துக்கு மிரட்டல்: உலக திருநங்கையர் போட்டியில் பங்கேற்க சென்ற கேரள வாலிபர் வெளியேறினார்!!
Next post ராஜஸ்தானில் ஆச்சரியம்: பெண் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டும் ஆண்கள்!!