சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு லேப்டாப் திருடனாக மாறிய இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் கைது!!

Read Time:1 Minute, 42 Second

89449f78-8e1e-4849-8446-0b4568b2dd56_S_secvpfஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கான விடுதியில் தங்கியபடி பி.டெக் படித்து வரும் ராம் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சைதன்யா இன்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வரும் ராம் குமார். சொகுசான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டுள்ளார். அந்த சொகுசு வாழ்க்கைக்காக அவர் செய்த வேலைதான் லேப்டாப் திருட்டு. விடுதியில் உள்ள மாணவர்கள் தங்கள் அறையை சரிவர பூட்டாதது ராம் குமாருக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. 2014-ம் ஆண்டிலிருந்து 5 விலையுயர்ந்த லேப்டாப்களை திருடியுள்ள ராம் குமார், அதில் இரண்டை துனி என்கிற இடத்தில் விற்றுள்ளார்.

ஆந்திர பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து தொடர்ச்சியாக லேப்டாப் திருடப்படுவதாக வந்த புகாரையடுத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த போலீசார் நேற்று ராம் குமாரைக் கைது செய்தனர். அவரிடமிருந்த 3 லேப்டாப்களையும் பறிமுதல் செய்த போலீசார் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களுக்கு நிகராக மின்கம்பம் ஏறும் 3 குழந்தைகளின் தாய்: கடின உழைப்பால் மின்வாரிய ஊழியர் ஆனார்!!
Next post சேலம் அருகே காதலிக்க மறுத்ததால் மாணவியை தீ வைத்து கொளுத்திய வாலிபர் கைது!!