கண்டு கொள்ளாத அரசு: கைகோர்த்த கிராம மக்கள் ரத்தம் சிந்தி உருவாக்கிய சாலை!!

Read Time:2 Minute, 3 Second

e136e955-6d14-4466-8296-e2b240608deb_S_secvpfசுதந்திரமடைந்து 65 ஆண்டுகளைக் கடந்தும் சாலை வசதி ஏற்படுத்தித் தராத அரசுக்கு எதிராக இந்த மக்கள் போராட்டம் எதுவும் செய்யவில்லை. ஆனால், அவர்கள் உடைக்கும் ஒவ்வொரு செங்கல்லும், அமைக்கும் ஒவ்வொரு அடி சாலையும் மக்கள் மீது அக்கறையில்லாத அரசுக்கு அவமானமே.

இந்த உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாததைப் போல், சாலை வசதி கூட இன்றி தனித்தீவாக உள்ளது மேற்கு வங்க மாநிலத்தின் ஹிரன் மோய் கிராமம். அங்குள்ள பெண்கள் ஆண்கள், பெரியவர்கள் என்று ஒவ்வொருவரும் கொளுத்தும் வெயிலிலும் சாலை அமைக்கப் பாடுபடுகின்றனர். ஒவ்வொருவருக்கு பின்னாலும் ஒரு வலி நிறைந்த கதை இருக்கிறது.

26 வயதான மாதவி கடந்த வருடம் வீட்டிலேயே நரக வேதனையை அனுபவித்து தனது மகனை பிரசவித்தார். சாலை வசதியில்லாததால் தன்னைப்போல மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் இனி எந்த பெண்ணும் அவதிப்படக்கூடாதென்ற லட்சியத்துடன் அவர் உழைக்கிறார்.

கிராம மக்கள் இணைந்து 20 ஆயிரம் ரூபாய் நிதி திரட்ட, ஒரு தொண்டு நிறுவனம் செங்கல் வாங்கிக் கொடுக்க 4 வருடத்திற்கு முன் தொடங்கியது இந்த லட்சியப்பயணம்.

கடந்த 4 ஆண்டுகளாக மாதவியைப் போன்று பலர் ஒன்றிணைந்து தங்கள் கிராமத்திற்காக ராப்பகலாக வேலை செய்து இதுவரை 12 கிலோ மீட்டர் அளவிற்கு சாலை அமைத்துள்ளனர். இன்னும் இவர்களின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த வாலிபன்: நையப்புடைத்த பொதுமக்கள்!!
Next post தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் தலைமை கேஷியருக்கு 3 ஆண்டு சிறை: சிறப்பு சிபிஐ கோர்ட் தீர்ப்பு!!