போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்க முயன்ற கம்யூனிஸ்டு நிர்வாகி 2 பேர் கைது!!

Read Time:2 Minute, 27 Second

f0309bb3-de13-4677-85ee-311fb5759b3b_S_secvpfபோலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்க முயன்ற 2 பேரை கிருஷ்ணகிரி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா சூளகிரி அருகே உள்ளது கோனேரிப்பள்ளி. இந்த ஊரைச் சேர்ந்தவர் வெங்கடகிரியப்பா. இவரது மனைவி லட்சுமியம்மா. இவர்களுக்கு குழந்தை இல்லை. வளர்ப்பு மகனாக ராஜகோபால் என்பவர் இருந்தார். லட்சுமியம்மாளின் அனுபவத்தில் 14 ஏக்கர் நிலம் இருந்தது. அதன் மதிப்பு ரூ.5 கோடி ஆகும். அந்த நிலத்தை வளர்ப்பு மகன் ராஜகோபாலுக்கு எழுதி வைத்தனர். இந்த நிலையில் லட்சுமியம்மாவிற்கு குழந்தை இல்லாத காரணத்தை காட்டி அந்த சொத்தை அபகரிக்க வேண்டும் என்று லட்சுமியம்மாவின் உறவினர் ராமச்சந்திரப்பா திட்டம் தீட்டினார்.

இதையடுத்து ஓசூரைச் சேர்ந்த கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த பாப்பையா, விவசாய சங்க தலைவராக சூளகிரி சீனிவாசன் உள்பட சிலர் கூட்டு சேர்ந்து அந்த சொத்தில் வில்லங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினார்கள். அதன்படி லட்சுமியம்மாவின் சொத்தில் பள்ளிக்கூடத்திற்கும், தேசிய நெடுஞ்சாலைக்கும், கெலவரப்பள்ளி அணை கால்வாய்க்கும் கொடுத்துள்ள நிலங்களை எல்லாம் சேர்த்து மோசடி ஆவணங்களை ஏற்படுத்தினார்கள்.

மேலும் வளர்ப்பு மகனான ராஜகோபாலின் அனுபவத்தில் உள்ள நிலத்தில் அத்துமீறி நுழைந்து, நிலத்தை காலி செய்யும்படி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து ராஜகோபால் கிருஷ்ணகிரி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவை ஜெயில் அதிகாரி டார்ச்சர் காரணமாக கைதி தற்கொலை முயற்சி?: விஸ்வரூபம் எடுக்கும் வாட்ஸ்அப் வீடியோ!!
Next post வடசேரியில் பிளஸ்–1 மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!