ஈரானின் அணுத்திட்டத்திற்கு உதவ ரஷ்ய ஜனாதிபதி உறுதியளிப்பு

Read Time:2 Minute, 58 Second

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் ஒன்றை ஈரானுக்கு மேற்கொண்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஈரானின் அணுத்திட்டத்திற்கு தகுதியான ஆதரவினை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். மேலும், ஈரானின் அமைதிக்கான அணு ஆயுதத் திட்டம் விரைவில் அனுமதிக்கப்படுவதுடன் ஈரானுக்கான உதவி வழங்குவது தொடர்பான முடிவினையும் ரஷ்யா மேற்கொண்டுள்ளதென ஊடகவியலாளர்களுக்கு புட்டின் தெரிவித்தார். இதேநேரம், மேற்குலக நாடுகளுடன் இவ்விடயம் தொடர்பாக முரண்பாடுகளுடனுள்ள ஈரானுக்கு இத்திட்டத்தினை பூரணப்படுத்துவதற்கு ரஷ்யாவின் உதவி அவசியமானதொன்றாகும். இதுவரை ஐ.நா.வின் அணுக் கண்காணிப்பு பிரிவினரால் ஈரானின் இத்திட்டம் முடக்கப்பட்டுள்ளது. இதனை இத்தடையிலிருந்து மீட்டெடுத்து அமுலுக்கு கொண்டுவருவதற்கே ரஷ்யா ஆதரவு வழங்குகின்றது. கஸ்பியன் பிராந்திய நாடுகளின் மாநாடு நடைபெறும் வேளையிலேயே இது தொடர்பான பேச்சுக்களை ரஷ்ய மற்றும் ஈரான் ஜனாதிபதிகள் மேற்கொண்டுள்ளனர்.

புட்டினின் ஈரான் விஜயத்தின்போது அவரைக் கொல்வதற்கான சதித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையினைத் தொடர்ந்து இவருக்கு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பாக விளாடிமிர் புட்டின் தெரிவிக்கும்போது, ஈரான் மீது போர்தொடுக்கும் நாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்த உதவியை நாம் வழங்குகின்றோம்.

ஒரு பலமான ஈரானைக் கட்டியெழுப்புவதில் ரஷ்யா அதீத அக்கறை கொண்டுள்ளதுடன் ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஆழமானதொரு நட்புறவையும் ஏற்படுத்திக்கொள்ளவே நாம் விரும்புகிறோமெனத் தெரிவித்தார்.

ஈரானின் ஜனாதிபதி மொஹ்மட் அஹமதி நிஜாத்துடன் பேச்சுகள் நடாத்திய புட்டின், அதற்குப் பின்னர் இது தொடர்பான பேச்சுக்களை ஈரான் உயர்கட்சித் தலைவர் அயொதொல்லாஹ் அலி ஹாமேனியுடனும் நடத்தியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முஷாரப் ராணுவ தளபதியாக தொடரலாமா? முழு பெஞ்ச் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Next post நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் ஐஸ்வர்யாராய்!