கராச்சியில் பயங்கரம்: பெனாசிரை கொல்ல முயற்சி- தற்கொலைப்படை தாக்குதலில் 133 பேர் பலி

Read Time:7 Minute, 13 Second

19003.jpgபாகிஸ்தானில் 1999ம் ஆண்டு ராணுவப் புரட்சி ஏற்பட்டதால் மக்கள் கட்சி தலைவர் பெனாசிர் லண்டன் சென்று குடியேறினார். சமீபத்தில் அவருக்கும் அதிபர் முஷரப்புக்கும் சமரசம் ஏற்பட்டது. இத னால் பெனாசிர் 8 ஆண்டுக்குப்பிறகு பாகிஸ்தான் திரும்பினார். கராச்சி விமான நிலையத்தில் பெனாசிருக்கு மக்கள் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பெனா சிர் வருகையால் மீண்டும் பாகிஸ்தானில் திருப்பு முனை ஏற்படும் என்று கருதி ஏராளமான பொதுமக் களும் அவரை வரவேற்க வந்திருந்தனர். சுமார் 1 லட்சம் பேர் கராச்சி விமான நிலையப்பகுதியில் திரண்டு பெனாசிரை வரவேற்றனர். மக்கள் அலைகடலென திரண்டதை கண்ட பெனாசிர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந் தார். மதியம் 1.30 மணிக்கு விமானத்தில் வந்து இறங்கிய அவர் வரவேற்புகளை பெற்றுக் கொண்டு பிற்பகல் 3.30 மணிக்குத்தான் கராச்சி நகர் நோக்கி புறப்பட முடிந் தது. கராச்சி விமான நிலையம் கராச்சி நகரில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலை வில் உள்ளது. இந்த 7 கிலோ மீட்டர் வழி நெடுக மக்கள் கட்சி தொண்டர்கள் ஆயிரக் கணக்கில் ஆங்காங்கே திரண்டு நின்று பெனாசிரை வரவேற்றனர். பாதுகாப்புக்காக 20 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கராச்சி புறநகர் பகுதியில் பாகிஸ்தானை உருவாக்கிய முகம்மது அலிஜின்னாவின் நினைவிடம் உள்ளது. வரவேற்பு ஊர்வலத்தில் வந்த பெனாசிர் அந்த நினை விடத்துக்கு அஞ்சலி செலுத்த சென்று கொண்டிருந்தார். அவரது காரை சுற்றி போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து சென்றன. ஒவ்வொரு இடத்திலும் பெனாசிர் நின்று நின்று சென்றதால் ஊர்வலம் கராச்சியை நெருங்க சுமார் 8 மணி நேரம் ஆனது.

9 மணி அளவில் அவர் முகம்மது அலிஜின்னா நினைவிடத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். அப்போது பெனாசிர் வாகனத்தின் முன்னே சென்று கொண்டி ருந்த கூட்டத்தில் திடீரென தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் குண்டு வீசி தாக்குதல் நடத்தினான். அவன் வெடிக்க செய்த குண்டு சாதாரண மாகத்தான் இருந்தது.

அடுத்த வினாடி பெனாசிர் கவச வாகனம் அருகே நின்ற தற்கொலை தீவிரவாதி தன் உடம்பில் கட்டி இருந்த சக்தி வாய்ந்த குண்டை வெடிக்கச் செய்தான். கராச்சி நகரமே அதிரும் வகையில் அந்த தாக்குதல் இருந்தது. 15 அல்லது 20 கிலோ குண்டுகளை ஒருங்கே இணைத்து வெடிக்க வைத்தால் எப்படி இருக்குமோ, அந்த மாதிரியான தாக்குதலாக இது இருந்தது.

2 குண்டு வெடிப்பிலும் சிக்கிய நூறுக்கணக்கானவர் கள் தூக்கி வீசப்பட்டனர். உடல்களும், வாகனங்களும் தூள், தூளாக சிதறின. பெனாசிர் வாகனத்தின் முன்பு போர்க்களம் போல உடல்கள் சிதறிக்கிடந்தன. சுமார் 600 பேர் பலத்த காயங்களுடன் அலறிய படி கிடந்தனர்.

மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதனால் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது. அந்த சமயத்தில் மின் தடையும் ஏற்பட்டதால் மக்கள் கட்சி தொண்டர்கள் குழப்பத் துக்கும், பீதிக்கும் உள்ளா னார்கள். போலீசாரும் ராணு வத்தினரும் அதிர்ச்சியில் இருந்து மீளவே சில மணி நேரம் ஆனது. அந்த அளவுக்கு தற்கொலை தாக்குதல் மிக கொடூரமாகவும், கோரமாகவும் இருந்தது.

தாக்குதலில் 140 பேர் உடல் சிதறி பலியாகி விட்டனர். பலரது உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து விட்டது. கராச்சியில் உள்ள 6 மருத்துவமனைகளில் அவர்களது உடல்கள் வைக்கப்பட்டுள்ளன.

குண்டு வெடிப்பில் சிக்கிய சுமார் 600 பேரில் 248 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. கராச்சியில் உள்ள எல்லா தனியார் மருத்துவமனைகளும் நிரம்பி வழிந்தன.

இதற்கிடையே பெனாசிர் என்ன ஆனார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பெனா சிரை சுற்றி பாதுகாப்புக்காக வந்திருந்த அதிரடிப்படை போலீசார் மிக சாதூரியமாக செயல்பட்ட னர். தற்கொலை தாக்குதல் நடந்ததும் அவர்கள் ராணுவத்தின் அவசர கால திட்டத்தை பயன்படுத்தி பெனாசிரை மீட்டனர். அவரை வேறு ஒரு ராணுவ கவச வாகனத்தில் கராச்சியில் உள்ள அவரது பூர்வீக வீடான பிலவால் இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

நள்ளிரவு 12 மணிக்கு அந்த வீட்டுக்கு பெனாசிர் சென்றார். அவர் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. “இது பெனாசிரை கொல்ல நடந்த முயற்சி” என்று பெனாசிரின் கணவர் குற்றம் சாட்டி உள்ளார்.

பெனாசிரை கொல்ல நடந்த முயற்சிக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித் துள்ளன. பெனாசிரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “உளவுத் துறை செயல் இழந்து விட்டது. எனவே உளவுத்துறை தலைவரை மாற்ற வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை நடந்த தற்கொலை தாக்குதல்களில் இதுதான் மிக, மிக மோசமான தாக கருதப்படுகிறது. இது உலக அரங்கிலும் அதிர்ச்சி அலை களை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த முஷரப் உத்தரவிட்டுள்ளார்.
par1573853.jpg
par1573925.jpg
par1573943.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பிரான்ஸில் புலிகளின் 5 உறுப்பினர்கள் கைது
Next post கொச்சி வந்த கப்பலில் நியுயார்க் நகர குப்பைகள்: சுங்க இலாகாவினர் அதிர்ச்சி