வடிவேலுவுடன் ஆட ஸ்ரேயாவுக்கு ரூ.50 லட்சம்

Read Time:2 Minute, 50 Second

vadivelu12.jpgsreya27.jpgசிவாஜியில் ரஜினி ஜோடியாக நடித்து முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்தவர் ஸ்ரேயா தற்போது விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி என மெகா பட்ஜெட் படங்களில் நடிக்கிறார் தெலுங்கு படங்களிலும் பிசியாக உள்ளார். வடிவேலு கதாநாயனாக நடிக்கும் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் நடனமாட முன்னணி நடிகை தேவைப்பட்டார். இதற்காக ஸ்ரேயாவை அணுகினார். பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் அவர் வடிவேலுவுடன் நடிப்பாரா? என்ற சந்தேகத்துலேயே அணுகினர். முமைத்கான், ரகசியா, நந்திதா போன்றோரைத்தான் ஒரு பாடலுக்கு வழக்கமாக ஆட வைக்கின்றனர். பெரிய கதாநாயகிகள் ஆடுவதில்லை. ஆனால் ஸ்ரேயா வடிவேலுவுடன் ஆட சம்மதம் தெரிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். அதற்காக அவர் கேட்ட சம்பளம் ரூ. 50 லட்சம். ஒரு பாடல்காட்சி மற்றும் ஒன்றிரண்டு சீன்களில் மட்டுமே அவரை நடிக்க கேட்டனர். ஒரு வாரத்துக்கு குறைவான நாட்களே அவரது கால்ஷீட் தேவைப்பட்டது. இதற்கு இவ்வளவு பெருந்தொகை கேட்டது தயாரிப்பு தரப்பினரை யோசிக்க வைத்தது. ஸ்ரேயா 100 நாட்கள் முழு படத்திலும் நடிக்க ரூ. 65 லட்சம்தான் சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடிவேலு படம் பிரமாண்ட அரங்குகள் அமைத்து படமாக்கப்படுகிறது. எமலோகம், இந்திரலோகம் அரங்குகள் பல கோடி செலவில் செட் போடப்பட்டுள்ளன. இதில் ஆடுவதற்கு ஸ்ரேயாதான் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குனர் தம்பி ராமையா விரும்பினார். ஏற்கனவே சிவாஜி படத்தில் வாஜி வாஜி மற்றும் சஹானா பாடல்களுக்கு பிரமாண்ட அரங்கில் ஸ்ரேயா நளினமாக ஆடியது அனைவரையும் கவர்ந்தது. வடிவேலுவுடன் அதே பாணியில் அவர் ஆடினால் பாடல் அனைவரையும் கவரும் என்று நினைத்தார்.

இதையடுத்து பணத்தை பார்க்காமல் ரூ. 50 லட்சத்தை கொடுத்து ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்து விட்டனர். வடிவேலுவுடன் அவர் ஆடும் காட்சி கடந்த ஓரிரு நாட்களாக படமாக்கப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 1943-ல் ஜப்பான் வீரர் அனுப்பிய தபால்: 64 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த விநோதம்!
Next post முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவை கொல்ல காது குடையும் பஞ்சு குச்சியுடன் வந்த மனித வெடிகுண்டு!