கடலூர் பள்ளிக்கூட வகுப்பறையில் பிணமாக தொங்கிய மாணவியின் 53 பக்க கடிதம் சிக்கியது: பரபரப்பு தகவல்கள்

Read Time:6 Minute, 14 Second

கடலூர் பள்ளிக்கூட வகுப்பறையில் பிணமாக தொங்கிய மாணவி பற்றி திடுக்கிடும் தகவல் பற்றி வெளியாகி உள்ளது. 53 பக்க கடிதம் சிக்கியது. கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ் 2 மாணவி ஆனந்தவள்ளி நேற்று காலையில் வகுப்பறையில் மர்மமாக தூக்கில் தொங்கினார். அவரது சாவு குறித்து கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர் தங்கியிருந்த பள்ளியின் விடுதியில் உள்ள அவரது பெட்டியை போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது மாணவியின் பெட்டியில் இருந்து டைரி ஒன்று சிக்கியது. அதில் 53 பக்கங்களில் உருக்கமான கடிதம் எழுதப்பட்டிருந்தது. இதில் ஒரு பக்கத்தில் ரத்தத்தால் எழுதப்பட்டிருந்தது. அதில் கூறியிருப்பதாவது :- இறைவா நான் வாழும் நாள் சில நாட்கள் தான். எனக்கு பிடித்தவர்களோடு வாழ வரம்கொடு. இல்லையென்றால் நீ படைத்த உயிரை நீயே எடுத்துக்கொள். என்று ரத்தத்தால் எழுதப்பட்டிருந்தது. மேலும் டைரியில் எழுதிய இருந்த முக்கிய கடிதம் வருமாறு:-

காயத்திரி நீ என்னை பார்த்து அன்பு என்றால் என்னவென்று கேட்டாய். ஆனால் அது உன்னால் சொல்ல முடியாது. அன்பு என்பது பிரிந்து இருந்து பார்த்தால் அதன் ஆழம் புரியும். வெளிப்படையான அன்பு என்பது ஏழு ஜென்மம் எடுத்தாலும் அது மறையாது. உன்னைப்பற்றி சாகும் சில மணி நேரத்திற்கு முன்னால் அறிந்துக் கொண்டேன். காலையில் நீ கூறிய வார்த்தைகள் என்னை எவ்வளவு வேதனைப்படுத்தியது தெரியுமா?

அது உனக்கு எப்படி தெரியும். இருந்தால் இவள். இல்லையென்றால் இன்னொருவள் என்று வாழ்ந்த உனக்கு அன்பு என்றால் என்னவென்று தெரியுமா? நீ இவ்வளவு நாள் எவ்வளவு கேவலமான எண்ணத்தோடு என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறாய் என்பதை தெரிந்து கொண்டேன். நீ இவ்வளவு நாள் எதற்காக என்னிடம் பேசிக் கொண்டிருந்தாய் புரிந்து கொண்டேன்.

நீ எனக்கு கூறிய வார்த்தைகள் அனைத்தையும் இன்னொருவள் கண்டிப்பாக உன்னிடம் கூறுவாள். அப்போது நீ என்னை கண்டிப்பாக நினைத்துப் பார்ப்பாய். எனக்கு எல்லா இடத்திலும் அன்பு கிடைத்தது. ஆனால் நான் வயதின் கோளாறால் உன் அன்பை எதிர்பார்த்தேன். இன்று காலை நீ கூறிய வார்த்தையில் பாதி உயிர் போனது, உன்னை பார்க்கும் போதெல்லாம் மீதி உயிர் போய் கொண்டே இருக்கிறது.

நெஞ்சு வலியால்…

ஆனால் நீ உண்மை தெரியும் போது கண்டிப்பாக வருத்தப்படுவாய். உன்னை பார்த்து நான் வருத்தப்படுகிறேன். உன் பக்கத்தில் வர எனக்கு பிடிக்கவில்லை. ஏன் என்றால் அன்று உன் பக்கத்தில் நெஞ்சு வலியால் துடித்த போது என்னை சிறிது கூட ஏறெடுத்து பார்க்கவில்லை. நான் இதுவரை வீட்டில் என் துணியை கூட துவைக்க மாட்டேன். ஆனால் தினம் தினம் உன் துணியை துவைத்தேன். அதை எல்லாம் நினைக்கும் போது என் மனது எவ்வளவு வேதனைபடுகிறேன்.

காயத்திரி என்றாவது ஒரு நாள் கூட உன்னிடம் வேறு ஏதாவது எதிர் பார்த்தேனா இல்லவே இல்லை. உன் அன்பை மட்டுமே எதிர்பார்த்தேன். அது முழுமையாக எனக்கு மட்டுமே கிடைக்க ஆசைப்பட்டேன். அது கிடைக்கவில்லை.

சாகிறேன்…

என் அப்பா, அம்மா என்னை எவ்வளவு நேசித்தார்கள் என்று நான் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் உன் அன்பை விட நான் உன்னை எல்லாரையும் விட அதிகமாக நேசித்தேன். இன்னும் அதிகமாக நேசித்துக் கொண்டே இருப்பேன். எல்லாருக்கும் பல குறைகள் இருக்கும். எனக்கு எல்லாம் இருந்தும் சாகிறேன். இவ்வாறு தனது கடிதத்தில் மாணவி ஆனந்தவள்ளி எழுதி இருந்தார்.

மற்றொரு பக்கத்தில் என் குறிக்கோள் டாக்டர் ஆக வேண்டும். ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

திவ்யாவுக்கு எழுதிய கடிதத்தில் உன்னை நினைக்கும் போது மிகவும் சந்தோஷபட்டேன். ஏன் என்றால் நீ எனக்கு உண்மையான தோழியாக இருந்தாய். அதனால் தான் கடைசி உண்மையை கூட உன்னிடம் கூறி சாகிறேன். இவ்வாறு திவ்யாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருந்தார். மேலும் பாக்கியா, சற்குணர், ஷர்மி ஆகியோருக்கும் ஆனந்தவள்ளி கடிதம் எழுதி இருந்தார்.

இந்த பரபரப்பு கடிதங்களை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குடிபோதையில் ரகளை செய்து தாலியை அறுத்த கணவரின் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி: தப்பி ஓட முயன்ற போது பிடிபட்டார்
Next post மகன்களுக்கு யார், யார் எவ்வளவு சொத்து வழங்குவது?: நடிகை சரிதா-நடிகர் முகேஷிடம் குடும்பநல கோர்ட்டு விசாரணை