புயல் சின்னத்தால் மழை: 7 மாவட்டங்களில் வெள்ள அபாயம்; பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

Read Time:9 Minute, 43 Second

25cloud.jpgதமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் தீவிரம் அடைந்துள்ளது. வங்கக் கடலில் தென் மேற்கு பகுதியில் தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையே குறைந்த காற்ற ழுத்த தாழ்வு நிலையாக இருந்தது. அது தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது மேலும் வலுவடைந்து வருகிறது. புயல் சின்னம் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், விழுப்புரம், கடலூர், சேலம், மதுரை, கோவை, நீல கிரி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டியது.புயல் சின்னம் காரணமாக அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் புதுவையிலும் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும், கடல் சீற்றம் இருக்கும், பலத்த காற்று வீசும் என்றும் வானிலை இலாகா தெரிவித்து உள்ளது.

தொடர் மழை காரணமாக, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, விழுப்புரம், கடலூர், சேலம், ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. மழையில் ஏரி, குளங்களும் நிரம்பி வருகின்றன.

மேட்டூர் அணை, பெரியாறு, வைகை அணை, மற்றும் நெல்லை, குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து அவை வேகமாக நிரம்பி வருகின்றன. சென்னைக்கு குடிநீர் வழங் கும் வீராணம் ஏரியும் நிரம்புகிறது.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் ஒரு இடத்தில் மழை பெய்தால் இன்னொரு இடத்தில் வெயில் அடிக்கும் நிலைமையும் உள்ளது.

அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதியில் மிக பலத்த மழையும், காற்றும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. மழை கொட்டியது.

இதனால் 17 ஏரிகள் நிரம்பி உள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்தது. மழை கொட்டியது.b கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வந்தது. காலையிலும் லேசாக மழை தூறியது.

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரு கிறது. மாவட்டத்தின் முக்கிய அணைகளான பேச் சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு-1, சிற்றாறு-2 ஆகிய அணைகள் நிரம்பின. முக்கடல் அணை தனது முழு கொள்ளளவான 25 அடியை தொடர்ந்து எட்டி வருகிறது. தொடர் மழை கார ணமாக மாவட்டத்தில் உள்ள 2500 குளங்களும் நிரம்பி உள்ளது.

குழித்துறை, தாமிரபரணி ஆறு, பழையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்மழை கார ணமாக ரப்பர் தொழில், செங்கல் சூளைகள் பாதிக்கப் பட்டுள்ளன. நாகர்கோவில் பகுதியில் நேற்று மதியம் வரை மழை பெய்தது.

நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்தது. குன்னூர்-மேட்டுப்பாளையம் ரோட்டில் ராட்சத மரம் விழுந்த தால் போக்குவரத்து பாதிக் கப்பட்டுள்ளது. கோத்தகிரி வழியாக ஊட்டிக்கு பஸ்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

மழை காரணமாக மேட் டுப் பாளையம்-குன்னூர் ரோட் டில் நிலச்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் லேசான மழை பெய்தது. தூறல் விழுந்தது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சத்தியமங்கலம், தாராபுரம் உள்பட பல பகுதி களில் அடை மழை பெய் தது.மழை கொட்டியது. இந்த மழையால் பவானி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணை யில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் நொய்யல் ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கரையோர பகுதி மக்கள் வெளியேறி வருகிறார்கள். இதே போல் சத்தியமங்கலம் வனப்பகுதியிலும் மழை கொட்டுவதால் வனப் பகுதி யில் ஓடைகள் நிரம்பி வருகி றது.

நாகை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்துவரும் மழையால் நகரின் பல இடங் களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது.

அக்கரை பேட் டையில் உள்ள சுனாமி குடியிருப்புகளிளும் மழை வெள்ளத்தில் மூழ்கின. நாகை மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு உள் ளது. கொந்தளிப்பான நிலை யில் கடல் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.

நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதியில் இதுவரை இல்லாத வகையில் கனத்த பேய் மழை கொட்டியது. மேற்கு தொடர்ச்சி மலை, கருப்பாநதி அணைபகுதி, அடவி நயினார் அணைப்பகுதி, கடையநல்லூர், சிவகிரி பகுதியில் வரலாறு காணாத அளவு கனமழை கொட்டியது.

பலத்த மழை காரணமாக கடையநல்லூர் பகுதியில் பெரியாறு, வரட்டாறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடி யது.

இதனால் கடையநல்லூரில் உள்ள வல்லவன் கால்வாய், பாப்பான் கால்வாய், தேவர் கால்வாய்களில் தண்ணீர் நிரம்பி குடியிருப்புகளில் வெள் ளம் புகுந்தது.

கடையநல்லூர் பஸ் நிலைய பகுதி, சலவை தொழிலாளர் காலனி, எம்.ஜி.ஆர். நகர், நத்தகர் பள்ளிவாசல் பின்புறம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடு களுக்குள் வெள்ளம் புகுந்தது.

வல்லன்கால்வாய் அருகே உள்ள கடையநல்லூர் சட்ட சபை தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்திற்குள்ளும் வெள்ளம் புகுந்தது. இதனால் எம்.எல்.ஏ. அலுவலக கோட் டைச்சுவர் இடிந்து விழுந்தது.

கடையநல்லூர் குடிநீரேற் றும் நிலையமும் வெள்ளம் காரணமாக மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. கடையநல்லூர் பஸ் நிலைய பகுதி, செங் கோட்டை செல்லும் சாலை பகுதி ஆகியவற்றில் ஆறுபோல் தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது.

ஏராளமான தென்னை மர தோட்டங்களும், வயல்களும் தண்ணீரில் மூழ்கின.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் குளங்கள் நிரம் பின.

விளாத்தி குளத்தில் விடிய விடிய மழை பெய்தது. தொடர் மழை காரணமாக விளாத்திகுளம் அடுத்த மீனாட்சிபுரம், மார்த்தாண்டம்பட்டி, வீர பாண்டியபுரம், அயன் செங்கல் படை, கம்மாபட்டி குளங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட குளங்களில் உடைப்பு ஏற்பட் டன.

மீனாட்சி புரத்தில் குளம் உடைந்து ஊருக்குள் நீர் புகுந்தது. விளாத்திகுளம் வைப்பாறில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் தரைப்பாலம் மூழ்கியது. பாலத்துக்கு மேல் ஒரு அடி உயரத்துக்கு தண்ணீர் செல்கிறது. கிராமங்களும் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் அவ திக்குள்ளானார்கள்.

புதுவையிலும் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

புதுவையி பலத்த மழை பெய்தது. மழை நீடிக்கும் என வானிலை இலாகா அறிவித்து இருப்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வள்…வள்..வள்…! நாயாய் துரத்தும் புகார்! -ஓடி ஒளியும் ஸ்டண்ட் மாஸ்டர்!
Next post விமானப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு முன்னர் அந்தப் பகுதிக்கு புலிகள் வந்து சென்றுள்ளனர்