முதன்முறையாக சிறப்புத் தோற்றத்தில்…!!

Read Time:1 Minute, 37 Second

sivakarthikeyanசிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவுக்கு ‘3’ படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவின் நண்பராக நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த அனைத்து படங்களிலும் ஹீரோவாகவே நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது முதன்முறையாக ஒரு படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள கன்னட படம் வஜ்ரகயா. இப்படத்தில்தான் சிவகார்த்திகேயன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இவர் மட்டுமல்லாமல், மலையாள நடிகர் திலீப், தெலுங்கு நடிகர் ரவிதேஜா உள்ளிட்டோரும் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ஹர்ஷா என்பவர் இயக்கியுள்ளார். காருண்யா ராம் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் வருகிற 12-ந் தேதி வெளியாகவிருக்கிறது.

கன்னடத்திலும், சிறப்புத் தோற்றத்திலும் முதன்முறையாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், இதைத் தொடர்ந்து பல படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேஸ் புக், டுவிட்டர், வாட்ஸ் அப் குறித்து நடிகர் விவேக் கவலை!
Next post சாத்தான்குளம் அருகே கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் கைது!!