புலிகளின் தலைவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் சுகமான தூக்கம்.. தன்பிள்ளைகளை இழந்த வன்னிப் பெற்றோர்களின் மனங்களில் துக்கம்.. வெளிநாடுகளில் புலிப்பினாமிகள் மகிழ்ச்சி வெள்ளம்…

Read Time:2 Minute, 59 Second

வன்னிபுலிகளின் முக்கிய தலைவர்களான பிரபாகரன், சு.ப.தமிழ்செல்வன், நடேசன், பாலகுமார் உட்பட முன்னணி தலைவர்களின் வாரிசுக்கள் எல்லாம் அயர்லாந்திலும், நோர்வேயிலும், அவுஸ்திரேலியாவிலும், வழமாக கல்விகற்று வருகின்றனர். இவர்கள் தமிழீழத்திலும், இலங்கை அரசினால் நடத்தப்படும் க.பொ.த பரீட்சையில் பங்குபற்றி கல்விபெற்றிருந்தனர். அங்கு அவர்களுக்கு ஆயுதங்கள் தூக்க வேண்டிய நிற்பந்தமோ அன்றி பலாத்கார ஆட்சேர்ப்புக்கு ஆளாக வேண்டிய அவசியமோ இருக்கவில்லை. இலங்கையில் கல்வியை முடித்துக்கொண்டு சமாதான காலத்தில், ரணில் விக்கிரசிங்கவின் தயவில் வெளிநாட்டுக்கு கல்வி கற்க்க சென்றுவிட்டனர். வன்னியில் வறிய மக்களின் பிள்ளைகளோ பலாத்கார ஆட்சேர்ப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி யுத்த முனையில் அநியாய பலிக்கடாக்களாக தமிழீழ பகற்கனவுக்கும், மாவீரர் உரைக்கும் இன்றி பலிகொடுக்கப்பட்டுள்ளனர். நரகாசுர பிரபாகரனால் அனுராதபுர விமானபடைத் தளத்தில் வைத்து நரபலி கொடுக்கப்பட்ட 21 தமிழ்பிள்ளைகள் யாபேருமே நரகாசுரனின் பிள்ளைகளோ அல்லது நரகாசுகடவுளை தெய்வமாக வணங்கும் பக்தர்களின் (வெளிநாட்டில் வாழுபவர்களின்) பிள்ளைகளோ அல்ல. நாட்டில் வலுகட்டாயமாக தமழீழ போராட்டம் என்ற போர்வையில் பிரபாகர பயங்கரவாதற்கு பிணமாக்கி பணமாக்குவதற்கு சேர்க்கப்பட்டவர்கள். நரகாசுரனின் பிள்ளைகளும் அந்த கடவுளை பூசிப்பவர்களின் பிள்ளைகளும் வெளிநாடுகளில் வசதியாக வாழ்கிறார்கள். இப்படி ஏதாவது பயங்கரவாத செயல்கள் செய்து காட்டினால் தான் வெளிநாட்டில் வாழும் நரகாசுர பக்தர்கள் பணம் கொடுப்பார்கள். சந்தோசப்படுவார்கள். நடந்த நரபலி நிகழ்சியையிட்டு நரகாசுர பக்தர்களும் அவர்களின் ஊடகம்களும் பெருமகிழ்சி அடைந்ததை அவதானிக்க கூடியதாக விருந்தது. இந்த நிகழ்வுக்கு முன்பு கொஞ்ச காலங்களாக இராணுவ முன்னரங்க பகுதிகளில் நாளாந்தம் பலதமிழர்கள் பலி கொடுக்கப்பட்டு கொண்டிருந்தார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post (அ)சிங்கமா? அல்லது ???? ஈபிடிபி டக்ளஸ்! (முன்னைநாள் ஈபிடிபி உறுப்பினரின் ஆக்கம் இது)
Next post சிரியா மீதான இஸ்ரேலின் விமானத் தாக்குதல் புகைப்படங்களை வெளியிட்டது அமெரிக்கா