திருப்பத்தூர் அருகே தம்பியை மகனுடன் சேர்ந்து குத்திக்கொலை செய்த அக்கா கைது!!

Read Time:4 Minute, 5 Second

19541e05-2b9a-4b5e-858f-75dfa3efc42b_S_secvpfதிருப்பத்தூர் தாலுகா அரவபட்றபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகள் சசிகலா(வயது37), மகன் விஜயகுமார்(27). சசிகலாவுக்கு திருமணமாகி கவிதா(21) என்ற மகளும், விஜயசேகர்(20) என்ற மகனும் உள்ளனர்.
சகிகலா தனது மகன், மகளுடன் தனியாக வசித்து வருகிறார், விஜயகுமாருக்கு இன்னும் திருமணமாகவில்லை. குனிச்சி என்ற இடத்தில் சைக்கிள் கடை வைத்துள்ளார். அவரும் தனியாகவே வசித்து வந்தார். அக்கா மகள் என்பதால் கவிதாவை திருமணம் செய்ய விஜயகுமார் விரும்பினார்.

சசிகலாவும் முதலில் விஜயகுமாருக்கு மகளை திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளார். ஆனால் காலப்போக்கில் விஜயகுமாரின் நடவடிக்கைகள் மாறியது, குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாகவும் தெரிகிறது. எனவே வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து மகளை திருமணம் செய்து வைத்தார்.

இது விஜயகுமாரின் மனதை பாதித்தது, இதனால் அவர் மேலும் அதிக அளவில் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். மகளை திருமணம் செய்து வைக்காததை கூறி அடிக்கடி சசிகலாவை விஜயகுமார் அவ்வப்போது தொந்தரவு செய்து வந்தார். குடிக்கவும், சிகரெட் புகைக்கவும் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார்.

நேற்றும் அக்கா சசிகலா வீட்டுக்கு விஜயகுமார் சென்றார். அப்போது அவர் குடிபோதையில் இருந்தார். சிகரெட் வாங்க தனக்கு பணம் வேண்டும் என்று கேட்டு சசிகலாவை தொந்தரவு செய்தார். திடீரென தாக்குதலில் அவர் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.

சசிகலாவும் அவரது மகன் விஜயசேகரும் அவரை சமாளித்து பார்த்தனர். ஆனால் விஜயகுமாரின் தொல்லை எல்லை மீறிப்போனது. இதனால் அவர்கள் ஆத்திரம் அடைந்தனர், அவரை கம்பால் தாக்கினர்.

அப்போதும் விஜயகுமார் வெளியே செல்லவில்லை. எனவே சசிகலாவும் விஜயசேகரும் கத்தியால் விஜயகுமாரை வெட்ட ஆரம்பித்தனர்.

கத்தி வெட்டு தாக்குதலை தாங்கிக் கொள்ள முடியாத விஜயகுமார் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இருந்தபோதிலும் சசிகலாவும் விஜயசேகரும் விடாமல் துரத்தி சென்று கத்தியால் வெட்டினர். அங்குள்ள பேருந்து நிறுத்தம் வரை ஓடிய விஜயகுமார் அங்கேயே கீழே சாய்ந்தார். சிறிது நேரத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் கந்திலி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விஜயகுமாரை கொலை செய்த சசிகலா, விஜயசேகர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

குடிபோதையில் வந்து பணம் கேட்டு தகராறு செய்ததால் கொன்றதாக சசிகலாவும், விஜயசேகரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

கைதான விஜயசேகர் வாணியம்பாடியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சித்தூர் வனப்பகுதியில் செம்மர கடத்தல்: வேலூர் வாலிபர் கைது!!
Next post திருச்சி மாநகரில் கடந்த 6 மாதங்களாக தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட பாலிடெக்னிக் மாணவர்கள் கைது!!