சரத் டி ஆப்ருவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ்!!

Read Time:1 Minute, 34 Second

193656841Courtதனக்கெதிராக நடைபெறும் பொலிஸ் விசாரணைகளை நிறுத்துவதற்கு உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்ற நீதியரசர் சரத் டி ஆப்ரு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை மீளப் பெற்றுள்ளார்.

குறித்த மனு பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினரால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தன்னுடைய கட்சிக்காரர் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதனால் அடிப்படை உரிமை மீறல்கள் இடம்பெற வாய்ப்பில்லை என்று நீதியரசர் சரத் டி ஆப்ரு சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக குறித்த மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு நீதிமன்றைக் கேட்டுக்கொண்டார்.

சட்டத்தரணியின் கோரிக்கையை பரிசீலித்து பார்த்த மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் குறித்த மனுவை வாபஸ் பெறுவதற்கு அனுமதி வழங்கியதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலி கடவுச்சீட்டில் இத்தாலி செல்ல முயன்றவருக்கு நடந்த கதி!!
Next post பிரேமலால் ஜயசேகர தொடர்ந்து விளக்கமறியலில்!!