50 பெண் குழந்தைகள் பிறந்ததை விழா எடுத்து கொண்டாடிய அரியானா கிராமம்!!

Read Time:2 Minute, 20 Second

நாடு முழுவதிலும் உள்ள 100 மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வரும் நிலையில், அரியானா மாநிலத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் இன்னும் மோசமான நிலையில் இருக்கிறது.

அரியானாவில் உள்ள பிபிபூர் என்னும் சிறு கிராமத்தின் தலைவர், மகள்களுடன் தந்தையர்கள் ‘செல்பி’ எடுக்கும் போட்டியை தொடங்கி வைத்தார். இது சமூக வலைதளங்கள் மூலம் பரவி ‘செல்பி வித் டாட்டர்’ என்ற தலைப்பில் புகைப்படம் எடுத்து பதிவு செய்தனர்.

இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள டனெவாலா என்ற கிராமத்தில், கடந்த ஆறு மாதத்தில் 50 பெண் குழந்தைகள் பிறந்ததை கொண்டாடும் விதமாக, பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இதில் அந்த குழந்தைகளின் தாய்மார்களுக்கு மரியாதை அளித்தும், பாராட்டுச் சான்றிதழையும் அம்மாவட்டத்தின் துனை கமிஷனர் ஜாஸ்கரன் சிங் வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

“முக்ட்சர் மாவட்டத்தில், டனெவாலா கிராமம் மட்டும் தான் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் மிகவும் பின்தங்கி உள்ளது. இங்கு பிறப்பு விகிதம் 1000 ஆண்களுக்கு 559 பெண்களாக உள்ளது வருத்தம் அளிக்கிறது.

எனவே, பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கச் செய்ய இதுபோன்ற நிகழ்ச்சிகள் மாதந்தோறும் நடத்த முடிவு செய்துள்ளோம். இதே போல் ‘நாரி ஜாபால்’ என்ற பெண்களின் உரிமைகளை பற்றி எடுத்துரைக்கும் நிகழ்ச்சியும் நடத்தப்படும்.” என்று அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐதராபாத்தில் இளம் சகோதரிகள் குத்திக் கொலை!!
Next post குரங்கு மீது சங்கிலி பறிப்பு வழக்கா?: மண்டையை சொறியும் போலீசார்!!