29ம் திகதி முதல் பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை!!

Read Time:1 Minute, 30 Second

666108108Schoolவரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு பிரத்தியேக வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் போன்றவற்றை நடாத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

இம்மாதம் 29 ம் திகதி நள்ளிரவு முதல் இந்த தடை அமுலாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனுடன் பரீட்சைக்கான மாதிரி வினாக்கள் மற்றும் விடைகள் அச்சிடுதல் மற்றும் அவற்றை விநியோகித்தல் கையேடுகள் அச்சிடுதல் மற்றும் அதனை விநியோகித்தல் போன்றவற்றிற்கும் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பரீட்சை திணைக்களத்தின் இந்த அறிவுறுத்தலை மீறும் மாணவர்கள், ஆசிரியர்கள், அல்லது நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவ்வாறு மீறுவோர் தொடர்பாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பரீட்சைகள் திணைக்கள்திற்கோ தகவல் தருமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதை ஓரத்தில் இருந்து கைக்குண்டு மீட்பு!!
Next post நீதியான தேர்தலை நடத்துவதற்கு தமது முழு ஆதரவும் வழங்கப்படும்!!