ரணில் தாக்கல் செய்த அமைச்சரவைப் பத்திரத்தில் 50 பில்லியன் மோசடி!!
நெடுஞ்சாலைகள் அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவைப் பத்திரங்களை நிராகரித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட பத்திரங்களில் சுமார் 50 பில்லியன் ரூபா வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணையாளரின் அறிவுரையின்றி தேர்தல் சட்டங்களை மீறி, தமது அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட அதிவேக வீதி வேலைத்திட்டங்களை பெயர் மாற்றி பிரதமரால் நேற்று மீண்டும் வரையப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர சந்திப்பிலேயே டிலான் பெரேரா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மதிப்பிடப்பட்ட நிதியில் மாத்திரம் புதிய அமைச்சரவை பத்திரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்மான நிறுவனம் மற்றும் வங்கி தொடர்பில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.